புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012

கம்பஹா மாவட்டத்திலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல, கட்டானை ஆகிய பல்வேறு வட்டாரங்கள் கம்பஹா மாவட்டத்துக்குள் வருகின்றன. குறிப்பாக வத்தளை, நீர்கொழும்பு ஆகிய வட்டாரங்களில் தமிழர்கள்
கணிசமாக வாழ்கிறார்கள். இங்கே தமிழர்களின் வாக்குகளை வாங்குவதில் அக்கறை காட்டும் பெரும்பான்மைக் கட்சிகள், அவர்களுக்குரிய பிரதிநிதித்துவங்களையும், நியமனங்களையும்கூட வழங்குவதில்லை. எனவே இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, தலைவர் மனோ கணேசனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
 


நடந்து முடிந்த சப்ரகமுவ மாகாண தேர்தல் வியூகம் அமைப்பதில் தலைவர் மனோ கணேசன், எத்துனை விட்டுகொடுப்புகளுக்கு மத்தியில், நேர்மையாக செயலாற்றினார் என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழர்கள் தங்கள் மாகாணசபை பிரதிநிதித்துவங்களைப் பெற வேண்டும் என்பதற்காக அவரின் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி பாரிய பங்காற்றியது.

ad

ad