புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012


அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள
மெக்சிகோ நாட்டு சிறையில், கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய 730 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிறையில் உள்ள கைதிகளை கணக்கு எடுத்தனர்.

அப்போது சிறையில் இருந்த 132 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிறையில் இருந்த கைதிகளில் 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்தது.
கைதிகள் தப்பியோடி சுரங்கம் 21 அடி நீளமும், 4 அடி சுற்றளவும், 9.5 அடி ஆழமும் கொண்டதாக இருந்தது. சிறையில் இருந்து சுரங்கம் வழியாக வெளியே வந்த சிறை கைதிகள், சுரங்கம் முடியும் இடத்தில் இருந்த வேலியை வெட்டி எறிந்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.
கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து சிறைத் துறை அதிகாரி உட்பட 3 முக்கிய சிறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து சிறை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சிறையில் உள்ள சுரங்கம் ஒரே நாளில் தோண்டப்பட்டது அல்ல.பல மாதங்களாக இந்த பணி நடைபெற்று வந்துள்ளது. சிறையில் அதிகளவிலான கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5ல் ஒரு பங்கு கைதிகள் தப்பியோடி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
சுரங்கத்தில் பல இடங்களிலும் மின் வயர்கள், கயிறுகள் ஆகிய கிடைத்துள்ளது. எனவே தப்பியோடிய கைதிகள் பல நாட்களாக திட்டமிட்டு, சுரங்கம் தோண்டி தப்பியோடி உள்ளனர் என்றார்.
தப்பியோடிய சிறை கைதிகளை கைது செய்யும் பணியில் போலீசாரும், இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடுவது இது முதல் சம்பவம் அல்ல.
ஏனெனில் கடந்த 2010 டிசம்பர் மாதம் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள டெக்சஸ் நகரில் இருந்த ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 153 கைதிகள் தப்பியோடியுள்ளனர். ஆனால் அதற்கு சிறைத்துறை பணியாளர்களில் 41 பேர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad