புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012

ஜிம்பாப்வேயை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4வது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது.
முதல் லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் மூலம் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முனவீரா 17 ஓட்டங்களும், டில்ஷன் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஜெயவர்த்தன 13 ஓட்டங்களும், சங்கக்காரா 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்தது. ஜீவன் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 183 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இலங்கை பந்துவீ்ச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக மககட்சா 20 ஓட்டங்களும், சிகும்பெரா 19 ஓட்டங்களும், கிரிமர் 17 ஓட்டங்களும் எடுத்தனர். நான்கு வீரர்கள் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பாக அஜந்த மென்டிஸ் 6 விக்கெட்டும், ஜீவன் மென்டிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அஜந்த மென்டிஸ் தெரிவானார்.

ad

ad