திங்கள், செப்டம்பர் 10, 2012


தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.

கிழக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக கசிந்துள்ள தகவல்!
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே 15 ஆசனத்தை பெற்று அதிகப்படியாக திகழ இருந்தது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதியின் அறிவித்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைக்கப்பட்டது.

கிராமம் முன்னேற சன சமூக நிலையங்கள் தேவை: புங்குடுதீவில் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு
 புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தை திறந்து வைத்தார்.

கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை தருக!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இரண்டு கட்சிகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமது தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளன.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுமாறும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


போலீஸ் துப்பாக்கிச் சூடு! திருச்செந்தூர் அருகே மீனவர் உயிரிழப்பு!

கிழக்கில் முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர
கிழக்கு மாகாண தேர்தலில் பாரிய வெற்றியை எதிர்பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியையே அடைந்துள்ளதுடன் எமது கோரிக்கையை ஏற்று முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்பதை உலகுக்கு
மு. கா.முதலமைச்சருடன் கூட்டமைப்பு-முகா-ஐதேக ஆட்சி அமைய வேண்டும் : மனோ கணேசன்
கிழக்கு மாகாணத்தில் எதிரணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குப் பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது கடந்த கால வரலாற்றுத்
வெற்றிபெற்றமாவட்டஉறுப்பினர்களைக்கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆராய்ந்து வரும் நிலையில், கட்சியின் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களை

மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி
மட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து
தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூ. க்கு மக்கள் தகுந்த பாடம்: சந்திரகாந்தன
பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.