புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுமாறும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் முஸ்லிம் காங்கிரஸ் கையில் வந்துள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த தேர்தலின் போது அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுடன் நடந்து கொண்ட விதத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் நினைத்து பார்க்க வேண்டும்.
ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அனைவரும் அழைக்கும் நிலைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அனைவருமே திரும்பி பார்க்க வைக்கவும் கிழக்கு மாகாண பெரும்பான்மையான முஸ்லிம்கள் வைத்துள்ளனர்.
இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனையோ அல்லது தேசிய காங்கிரசின் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவையோ யாரும் கணக்கெடுக்கவில்லை.
இவர்கள் இந்த சமூகத்தை காட்டிக்கொடுத்தவர்கள் என்றே கிழக்கிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தனித்துவமான பேரம் பேசும் சக்தி கிடைத்துள்ளது.
முஸ்லிம்களின் தனித்துவத்தையும் முஸ்லிம்களின் அபிலாசையையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான பூரணமான சந்தர்பம் கிடைத்துள்ளது.
இம் முறை முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்ட எழுச்சியானது முஸ்லிம் காங்கிரசை பேரம் பேச வைத்துள்ளது.முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வைத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வழங்கிய அங்கீகாரமானது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை வைத்து கிழக்கு மாகாண ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் கிழக்கு மாகாண சபையில் எடுக்கப்போகும் முடிவை தெற்கிலுள்ள முஸ்லிம் மக்கள் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனினும் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமானால் அரசாங்கத்துடன் முஸ்லிம்களின் நலம் சார்ந்த பல விடய்ஙகள் தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுத்து அதை ஒப்பந்தமாக கைச்சாத்திட்டு இதை முஸ்லிம்களுக்கு பகிரங்கப் படுத்த வேண்டும்.
அரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரசுக்கான முஸ்லிம் முதமைச்சரை கோர வேண்டும் என்பதையும் ஆலோசனையாக கிழக்கிலுள்ள முஸ்லிம் புத்தி ஜீவிகள் முன் வைக்கின்றனர்.

ad

ad