புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.
இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு நேற்று தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
அக்கடிதத்துடன் தேர்தல் முடிவு தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த பத்திரிகை அறிக்கை ஒன்றையும் ஆளுநருக்கு அவர்கள் தொலைநகல் மூலம் அனுப்பி வைத்தனர்.

ad

ad