புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


ஈராக்: பிரான்சு தூதரகம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்
ஈராக் நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மற்றும் சில தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 


இதற்கிடையில் இந்த ஆண்டில் இதுவரையில் நடைபெறாத வகையில் இன்று 15 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.தலைநகர் பாக்தாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டுஜைல் நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.

அங்குள்ள ராணுவ முகாம் நோக்கி காரில் வந்த தற்கொலை தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே குண்டை வெடிக்க செய்தான். இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 11 வீரர்கள் செத்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்து நச்சிரியா என்ற நகரிலுள்ள பிரான்சு நாட்டு தூதரக வளாகத்தில் கார் குண்டு வெடித்தது. இதில் தூதரக காவலுக்கு நின்ற ஒரு போலீஸ்காரர் இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நகரில் நடந்த மற்றொரு கார் குண்டு வெடிப்பில் 2 பேர் இறந்தனர்.
 மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.இதேபோல கிர்குக் நகரில் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க காத்திருந்த கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் நடந்தது. இதில் 8 பேர் பலியானார்கள்.அத்துடன் கிர்குக், சமார்ரா, பாஸ்ரா, துஸ்குர்மாதோ ஆகிய நகரங்களிலும் 7 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இன்று ஒரே நாளில் 10 இடங்களில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 39 பேர் உயிர் இழந்தனர்.

ad

ad