புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


கிழக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக கசிந்துள்ள தகவல்!
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே 15 ஆசனத்தை பெற்று அதிகப்படியாக திகழ இருந்தது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதியின் அறிவித்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைக்கப்பட்டது.
உண்மையிலே இத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வெற்றிபெறவில்லை. மூன்று ஆசனங்கள் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றிருந்தது.

7 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்தது. ஆனால் வாக்கெண்ணும் நிலையத்தினுள் இருந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு கதைத்ததன் பிரகாரம் கூட்டமைப்பே அதிக ஆசனத்தையும், வாக்கையும் பெறுகின்றது. அத்தோடு 2 மேலதிக ஆசனங்களையும் பெறுகின்றது.
ஜனாதிபதியின் பணிப்பில் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் அரசாங்க அதிபர் போன்றோர் திட்டமிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிக்கு வாக்குகளை குறைத்து சில வாக்குச்சீட்டுகளை நிராகரிக்கச் செய்து தேர்தலில் வெற்றிபெறாதிருந்த பிள்ளையானை அலிசாஹீர் மௌலானாவை விட 25 வாக்குகளால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனாலும் பிள்ளையான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களவாடப்பட்ட ஆசனத்தில் கொண்டுவரப்பட்ட போது (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 4வது இடம்) அது அரசாங்கத்தின் கௌரவத்தை சர்வதேசத்தில் பாதிக்கும் என்பதனால் திரும்பவும் வாக்கு பெட்டி விரும்பு வாக்கு எண்ணுவதாக நடவடிக்கை எடுத்து பிள்ளையானை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 22,338 வாக்கு பெற்றதாக மாற்றியுள்ளனர்.
அத்தோடு கல்குடா தொகுதியில் உள்ள இளம் வேட்பாளராக கி.சேயோன் என்பவர் பிள்ளையான், கருணாவின் சகோதரி போட்டியிடும் பகுதியை உள்ளடக்கி வருவதால் அதுவும் சர்வதேசத்தில் பிள்ளையான், கருணா ஆகியோருக்கு தமது பகுதியில் எதிர்ப்பு உள்ளதை காட்டுவதுடன், அரசாங்கத்தின் கௌரவத்தை பாதிக்கும் என்பதால் தமது கட்டுப்பாட்டு அறையை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கல்குடா தொகுதி வேட்பாளர் கி.சேயோன் மிக அதிகமான விருப்பவாக்குகளை பெற்ற போதும் அவரை வரவிடாது தடுத்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக சிங்களவர் ஒருவரே கடமையில் இருப்பதை குறிப்பிடுவது அவசியமாகும். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர், மற்றும் தலைமை வேட்பாளர் கி.துரைராசசிங்கம் போன்றோரை வாக்கு எண்ணும் அறைக்கு செல்வதற்கு உதவி தேர்தல் ஆணையாளரும், தற்போது உள்ள பெண் அரசாங்க அதிபரும் அனுமதிக்காமையும் திட்டமிட்ட சதியே.
அதுமட்டுமன்றி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் போன்றோர் கட்டுப்பாட்டு அறையிலும், அரசாங்க அதிபர் பகுதியிலும் விருப்ப வாக்கு மீண்டும் எண்ணும் பகுதியிலும் இருந்துள்ளனர்.
பிள்ளையானுக்கான விருப்புவாக்கை மீண்டும் எண்ணுவதாக கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கெண்ணும் நிலை முகவர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை.
ஏனெனில் இரவு முழுவதும் இவர்கள் கடமையில் இருந்து காலை வெளியேறியதும் காலை வேளையில் தமது தந்திர நடவடிக்கையை அரசாங்கம் தமது சிங்கள அதிகாரிகளை கொண்டு வந்து குவித்து பயன்படுத்தியது.
மேலும் வாக்கு எண்ணும் போது வெற்றிலைச் சின்னத்துக்கு புள்ளடி வழங்கியிருந்த வாக்குச் சீட்டில் ஒன்று அல்லது இரண்டு புள்ளடி விருப்பு வாக்குகளுக்கு இலக்கங்களில் இடப்பட்டிருந்தால் அதில் 14வது இலக்கம் வெற்றிடமானால் அங்கு கடமையில் இருந்து சிலர் 14வது இலக்கத்துக்கு இரகசியமாக புள்ளடி இட்டனர்.
இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கெண்ணும் முகவர் நிலையத்தில் பார்வையாளராக கடமை புரிந்தவர்கள் வாக்கு எண்ணுபவர்களுடன் முரண்பட்டுள்ளனர். பல வாக்கெண்ணும் பகுதியில் இது நடைபெற்றுள்ளது. தமிழ் அரச அதிகாரிகள் சிலரும் சிங்கள அரச அதிகாரிகள் பலரும் இதில் செயற்பட்டுள்ளனர்.
இதேவேளை தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா வாக்கெண்ணும் இடத்துக்கோ அன்றி அரசாங்க அதிபர் இருப்பிடத்துக்கோ வாக்கு எண்ணும் 8ம் திகதி இரவு செல்லவில்லை.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கருணா உட்பட்ட அமைச்சர்கள் அங்கிருந்தனர். வாக்களிப்பு வேளையிலும் வாக்கெண்ணும் வேளையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தமது வாக்கை போட்டுவிட்டு வீட்டிலே இருந்தார்.
ஆனால் மறுநாள் 09.09.2012 காலை வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அவர் அங்கு சென்றதும் முதலில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவருக்கே கைகொடுத்து வாழ்த்தியுள்ளார். இதை பலரும் நடைபெற்ற ஊழல்களை இவர் நன்கு அறிந்தும் ஊமை போன்று தமது தொலைபேசியை நிறுத்திவிட்டு வாக்கெண்ணும் பகுதியில் வெளியில் இருந்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக ஆசனம் இழந்தமைக்கு இவரும் ஒரு காரணமாகும். அதுமட்டுமின்றி தலைமை வேட்பாளர் கி.துரைராசசிங்கம் அவர்களும் அங்கு ஊழல்கள் இடம்பெறும் அதனை பார்க்க வேண்டும் என்ற கரிசனையில் செயற்படாது தாம் மாகாண சபை உறுப்பினராக வந்தால் போதும் என்ற உணர்வுடன் வாக்கெண்ணும் நிலையத்தின் வெளியில் ஊமையாக இருந்தார். இவ்வாறானவர்களின் அசமந்தப்போக்கே மூன்று ஆசன இழப்புக்கும் பிள்ளையான் திட்டமிட்ட வகையில் மீண்டும் மாகாணசபை உறுப்பினராக வருவதற்கும் வழிவகுத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் மிக ஆர்வமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஒரு சில அரசியல்வாதிகளும் தங்களை அர்ப்பணித்து இவ்விடயத்தில் செயற்பட்டனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை ஒழிக்கவும், அதன் ஆசனம் குறைவடையவும், மக்கள் வாக்களிப்பு வீதம் குறையவும் காரணமான சில விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு தரவேண்டிய கடமை உள்ளது.
01.மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு மிகவும் மோசமான முறையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டமை. அதற்காக தெரிவுக்குழு நியமிக்காமை, வேட்பாளர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டமை.
02.தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளாது வேறு மாவட்டத்தின் (அம்பாறை, திருகோணமலை) பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமை. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களிப்பில் மட்டக்களப்பில் கலந்து கொள்ளவில்லை.
03.சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாவின் சகோதரி, பிள்ளையான் போன்றோரின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியமை.
04.வாக்களிப்பு வேளை மாவட்டங்களில் ஊடுருவி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படாமை. வாக்குச் சாவடி பிரச்சனைகளுக்கு உடன் நடவடிக்கை எடுக்காமை.
05.வாக்கெண்ணும் நிலையம் மாற்றப்பட்ட போதும், 1000க்கு மேற்பட்ட சிங்கள அதிகாரிகளும் புலனாய்வு அதிகாரிகளும் குவிக்கப்பட்ட போதும், வாக்கெண்ணும் நிலையம் இரண்டாக்கப்பட்ட போதும் எதுவித ஆட்சேபனையையும் பகிரங்கமாக வெளியிட்டு அதற்காக முற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமை.
06.வாக்கெண்ணும் நிலையத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிப் பொறுப்பாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னர் செல்வராசா சென்று அவதானிப்பை மேற்கொள்ளாமை. ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்லாமை.
07.தலைமை வேட்பாளர் வாக்கெண்ணும் நிலையத்தில் உள்ளே சென்று அங்கு நடைபெறும் நடவடிக்கையை அவதானிக்காமை. வெளியில் இருந்தமை. (தரமான தலைமை வேட்பாளர் இன்மை இங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது)
08.பிற்பகல் 4.30 மணிக்கு வரவேண்டிய வாக்குப்பெட்டிகள் இரவு 7 மணிவரை சில வாக்குச் சாவடிகளில் இருந்தமை. அவற்றுக்கு ஒழுங்காக பாதுகாப்பு வழங்கப்படாமை.
09.07.09.2012 இரவு கடல் மார்;க்கமாக கொண்டுவரப்பட்டதாக அறிந்துள்ள வாக்குப் பெட்டிகள் சார்பாக அவதானம் செலுத்தாமை.
10.மீண்டும் ஒரு முறை வாக்கெண்ணச் செய்யும் வகையில் தமது ஆட்சேபனையை தலைமை வேட்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவிக்காமை.
11.சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சிக்காரர்களை மாத்திரம் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டமை.
12.வேட்பாளர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்யாமை. (பல இடங்களுக்கு வேட்பாளர்கள் செல்லவில்லை.)
13.பல வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த வேட்பாளர்கள் பெருந்தொகை பணத்தை சில அமைப்புக்களுக்கு வழங்கி தமது இலக்கத்துக்கு மாத்திரம் வாக்களிக்க குரல் கொடுத்தமை.
14.வேட்பாளர் சிலருக்கு வசதி இன்மை காணப்பட்டமை. சிலர் வசதியாக காணப்பட்டமை. தரமான வேட்பாளர் நியமிக்கப்படாமை. மாற்றுக் கட்சியில் இருந்தவர்களை நியமித்தமை.
15.தேர்தல் விஞ்ஞாபனம் எதுவும் வெளியிடப்படாமை.
16.தேர்தல் தினத்தன்றும் அதன் முதல் நாளும் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பினர் மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப பணம், பொருள்கள் அரசாங்கத் சொத்துக்களை கொடுத்தமை. மக்களது வாக்கு சீட்டுகளை பணம் கொடுத்து பெற்று கள்ள வாக்கு போட்டமை. மக்களை அச்சுறுத்தியமை, நாசிவந்தீவு போன்ற இடங்களில் மக்களை தாக்கியமை. (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி)
17.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க அதிகாரிகள், அரசாங்க வாகனங்கள், அரசாங்க சொத்துக்கள், மீள் எழுச்சி திட்ட பொருட்கள், பொருளாதார அமைச்சின் சொத்துக்கள், கச்சேரி வாகனங்கள், உடமைகள், மீள்குடியேற்ற அமைச்சு சொத்துக்களை பயன்படுத்தியமை. உதாரணமாக மட்டக்களப்பு கொக்குவில் கிராம சேவை அதிகாரி, செங்கலடி பங்குடாவெளி கிராம சேவை அதிகாரி, கோறளைப்பற்று கண்ணகிபுரம் கிராம சேவை அதிகாரி போன்றோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிள்ளையான், மோகன், ஜெயம் வெற்றிக்காக தமது கிராம சேவை பிரிவு மக்களை வெருட்டி வாக்கு பெற்றமை, பிரச்சாரத்தில் ஈடுபட்டமை.
18.70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் பண உதவியை வெற்றிலைக்கு வாக்களித்தால் மாத்திரமே தொடர்ந்து வழங்குவோம் என ஆயிரம் ரூபா பணம் வழங்கும் போதே முதியவர்களை சமூசசேவை அதிகாரிகள் வற்புறுத்தியமை.
19.சமுர்த்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி சமுர்த்தி முத்திரை தொடர்ந்து வழங்குவதானால் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டமை.
20.ஜனாதிபதி தேர்தல் நேரம் வருகை தந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டமையும், கட்டாயம் பிள்ளையான் வெற்றி பெறுவான் என உறுதி வழங்கியமை. (ஏனைய வெற்றிலை கட்சியின் எவ்வேட்பாளர் சார்பாகவும் ஜனாதிபதி உறுதி வழங்கவில்லை. இது சதி முயற்சியின் ஏற்பாடு.
21. 300 விளையாட்டுக் கழகத்துக்கு சீருடைகளை விளையாட்டு அமைச்சு வழங்கியதுடன் கச்சேரியில் இருந்து கொண்டு கள்ள வேலைகளை மேற்கொண்டமை.
22.வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விதவைகளுக்கு உதவி வழங்குவதாக வரவழைத்து வெற்றிலைக்கு வாக்களித்தால் தங்களுக்கு உதவிகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளர்.

ad

ad