புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013




           ளையராஜா -பாரதிராஜா... இந்த இரண்டு "சினிமா ராஜா'க்களும் ஈகோ சண்டையைப் போட்டுக்கொண்டு எம்புட்டு நாள்தான் வலிக்காதது மாதிரியே நடிக்க முடியும்?nakkeeran

கடந்த 20-ந் தேதி மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ரெண்டு ராஜாக்களும் பழைய... பாசக்கார ராஜாக்களாக மாறி அவர்களும் நெகிழ்ந்து, ரசிகர்களையும் நெகிழ வைத்திருக்கிறார்கள்.

பாரதிராஜா -இளையராஜா -வைரமுத்து என்கிற இந்த மூவர் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டதற்கு ஈகோ காரணம்... என ஈஸியாக சொல்லிவிடலாம். அவரவர் நிலையில் இருந்து பார்க்கும்போதுதான் அந்த நியாய தர்மங்கள் தெரியவரும்.  இருப்பினும் இந்தக் கூட்டணியின் பிரிவால் சம்பந்தப்பட்ட அவர்களை விட அதிகம் நஷ்டப்பட்டது... தமிழ்த் திரை இசைதான்.

பல வருடங்களாக பிரிந்து நிற்கும் இந்த மூவரும் மீண்டும் ஒரே இடத்தில் சேர்ந்தது இளைய ராஜாவின் தாயார் மரணத்தின்போது. துக்கத்தில் சந்தித்துக்கொண்ட இந்தக் கூட்டணி மீண்டும் துளிர்க்கும் என்கிற ரசிக எதிர்பார்ப்புகள் பொய்த்தே போனது. அதன்பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் நட்பைத் தொடர்ந்தாலும் இளையராஜா -வைரமுத்து நட்பு தொடரவில்லை. "இதை இளையராஜா விரும்பவில்லை...' என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.


பாரதிராஜா -இளையராஜா மீண்டும் நட்பைப் புதுப்பித்தாலும் கூட மீடியா வெளிச்சத்திற்கு  முன் இருவரும் அதிகமாக இணைந்து நிற்கவில்லை.

"விஸ்வரூபம்' இசைத் தகடை இளைய ராஜா வெளியிட பாரதிராஜா பெற்றுக் கொண்டதன் மூலம் நடந்தது.

"அன்னக்கொடி' படத்தை ஆறேழு மாதங்களுக்கு முன் தேனியில் தொடங்கியபோது... "நானும் இளையராஜாவும் சேர்ந்து படம் பண்ணப்போறோம்னு சொன்னனா? அம்மா கூட நெருக்கமா இருக்கிற பிள்ளை ஒரு கட்டத்தில் வேறு வேறு உறவுகளை... அனுபவங்களை தேடுவதில்லையா? அப்படித்தான் நான் வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றுகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா, "அன்னக்கொடி' இசை விழாவில் "நாம மறுபடி ஒண்ணு சேரணும். நீ, நான், வைரமுத்து இல்லாத சினிமா மதுரை மொட்டைக் கோபுரம் மாதிரி இருக்கு' எனச் சொல்லியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்து பாடல் எழுதிய "அன்னக்கொடி' இசை வெளியீட்டு விழாவை கடந்த டிசம்பர் 15-ந் தேதியே மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்தார் பாரதிராஜா. வைரமுத்துவையும் மேடையேற்ற ஆர்வம் காட்டினார். ஆனால் இளையராஜா பிடிவாதமாக இருந்ததால், விழா தள்ளிப்போனது. அதனால் வைரமுத்து இல்லாமல் விழாவை நடத்திவிட திட்டமிட்டார்.

இளையராஜா குடும்பத்தினரும், பாரதி ராஜா குடும்பத்தினரும் விழாவுக்கு மூன்று நாள் முன்னதாகவே வந்து தேனியில் தங்கி அளவளாவினார்கள். விழா நாளன்று தேனியிலிருந்து கிளம்பி வந்தார்கள். இரண்டு குடும்பமும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத் துக்கொண்டு குதூகலப்பட்டது.

பாக்யராஜ், பார்த்திபன், மகேந்திரன், சத்யராஜ், கங்கை அமரன், ராதிகா... என திரளானவர்கள் கலந்துகொண்டனர். வெளிநாடு சென்றிருப்பதால் கமல் வீடி யோவில் வாழ்த்தியிருந்தார்.


விழாவில் பேசிய பாரதிராஜா... ""எனக்கு இரண்டு அம்மாக்கள். ஒருவர் என் தாய். மற்றவர் இளையராஜாவின் தாய். என் வீட்டில் நான் சண்டை போட்டுவிட்டு கிளம்பினால் எனக்கு உணவும், உடையும் தந்து ஆதரிப்பார் என் நண்பனின் தாய். என் குடும்பமும், உறவுகளும் என்னைத் திட்டினாலும் நான் எனது நட்பில் இருந்து பின்வாங்கவில்லை. எனக்கு சாதி, மதம், கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் இளையராஜாவை "வாடா, போடா' என மேடையிலும் கூட பேசுவதால் என்னோடு வருத்தப்பட்டு இடையில் விலகி நின்றான். ஆனால் அவனை அப்படியே அழைத்துப் பழகிவிட்டேன்'' என நட்பின் வலிமையைச் சொன்னார்.

""மூணு நாளைக்கு முன்னாடியே வந்து தங்கி, அவனை நான் பாராட்ட வந்திருக்கேன். நான் இந்த மண்ணில் கால் வைக்கும் போதெல்லாம் என் சிநே கிதன் நினைவுதான் வரும்'' என இளையராஜா பேசினார்.

"புன்னகை மன்னன்' படத்தோடு இளையராஜா -வைரமுத்து கூட்டணி தன் புன்னகையை இழந்தது.

"நாடோடித் தென்றல்' படத்தோடு இளைய ராஜா -பாரதிராஜா பாட்டுச் சத்தம் நின்றது.

இந்த மூவரும் தனி ஆவர்த்தனங்களில் ஜொலித் தாலும்கூட மீண்டும் இணைந்து ராகம் பாட "அன்னக் கொடி' காரணமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.   

-இரா.த.சக்திவேல், முகில்
படங்கள் : அண்ணல்

 அஞ்சா நெஞ்சர்!

"அன்னக்கொடி' படத்திலிருந்து நீக்கியதால் பாரதிராஜா மீது பார்த்திபன் வருத்தமாக இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க... பாரதிராஜாவை வாழ்த்த பார்த்திபனும் வந்திருந்தார்.

""மதுரை என்றாலே "அஞ்சா நெஞ்சர்' பட்டம் எனக்கு ஞாபகம் வரும். தமிழ் சினிமா உலகில் அந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவர் பாரதிராஜா. 

"சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் அவர் யாருக்கும் அஞ்ச மாட்டார்' என பார்த்திபன் சொல்ல... ஏக கைதட்டல்கள்.

ad

ad