புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013




           ""ஹலோ தலைவரே... செல்ஃபோன் கட்டணமெல் லாம் டபுளாயிடிச்சி..''

""ஆமாம்ப்ப்''…

""தலைவரே கட் ஆயிடிச்சி..''

""ஆமாம்ப்ப்''…
nakeraan
""மறுபடியும் கட் ஆயிடிச்சி.. இப்படித்தான் அடிக்கடி கட் ஆகுது. என்ன சர்வீஸ்னே தெரியல. கட்டணத்தை கட் பண்ணச் சொன்னா, சர்வீஸை கட் பண்ணுறாங்க. நான் மேட்டருக்கு வர்றன். பா.ஜ.க. வின் புதிய தலைவர் ரேஸில் திடீர்னு ராஜ்நாத் சிங் முன்னாடி ஓடிவந்துட்டாரே கவனிச்சீங்களா?''

""உத்தரபிரதேசத்து முன்னாள் முதலமைச்சர்.. ஏற்கனவே அத்வானிக்குப் பிறகு கட்சித்தலைவரா இருந்தவர். கட்காரிக்கு இரண்டாவது முறை தலை வர் பதவி கிடைக்குமான்னு எல்லோரும் எதிர்பார்த்துக் கிட்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத ராஜ்நாத் சிங் எப்படி தலைவர் ஆனாராம்?''

""டெல்லி வட்டாரங்களில் விசாரித்தேங்க தலைவரே.. .. உள்விவகாரங்களை ரகசிய குரலில் சொன்னாங்க. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையிலும் கட்காரிதான் இரண்டாவது  முறையும் தலைவர் ஆவார்னு கட்சியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், கட்சி தேர்தலுக்கு முன்னாடி மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் சந்திச்சிக்கிட்ட அத்வானியும் கட்காரியும் முகம் கொடுத்து பேசலை. கைகுலுக்கிக்கக்கூட இல்லை. பொதுவா, வடநாட்டு அரசியல்வாதிகள் இப்படி இருக்கமாட்டாங்க. அதுவும் ஒரே கட்சியை சேர்ந்தவங்க இப்படி விறைப்பாவும் முறைப்பாவும் இருந்தது பா.ஜ.க.வினருக்கே ஷாக்காகத்தான் இருந்திருக்கு.''

""ஏன் இப்படி ஒரு  முறைப்பாம்?''

""கட்காரிக்கு இன்னொரு வாய்ப்பு தருவதை அத்வானி சுத்தமா விரும்பலையாம். இரண்டு பேருமே ஆர்.எஸ்.எஸ்.ஸின் தயாரிப்புகள்தான்னாலும் இந்த முறை கட்காரிதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் சாய்ஸ். அத்வானியோ சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத்  இவங்களில் ஒருத்தர் தலைவராகட்டும்ங்கிற நிலையில் இருந் திருக்கிறார். தலைவர் பதவிக்குப் போட்டின்னு வந்தால் கிட்டதட்ட 2000 பேர் ஓட்டு போட ணும். ஆர்.எஸ்.எஸ் சப்போர்ட் உள்ளவங்களுக் குத்தான் அதிக ஓட்டு கிடைக்கும். இதை அத்வானி விரும்பலை. அதனாலதான், கட்காரி மீதான தன்னோட எதிர்ப்பை கட்சி மேடையிலேயே காட்டியிருக்கிறார் அத்வானி.''

""கடைசியில் அவர் விரும்பின மாதிரி கட்காரியால் தலைவராக முடியல. ஆனா, அத்வானி சிபாரிசு செய்தவங்களும் தலைவர் பதவிக்கு வரலையே?''

""சுஷ்மா ஸ்வராஜ் இப்ப லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறார். அருண் ஜெட்லியோ ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலை வர். இருவரில் ஒருவர் தலைவரானால் அந்தப் பதவிக்கு வேறொருவரை நியமிக்கணும். அதற்கு சரியான ஆளைத் தேடணும். அதோடு, அவங்க இரண்டுபேருமே இப்ப இருக்கிற பதவியை விட்டுவிட்டு கட்சித்தலைவர் பதவிக்கு வர விரும்பலையாம். தலைவர் பதவிக்கு யஷ்வந்த்சின் காதான் மனு வாங்கிட்டுப்போனார். ஆனா, அவருக்கு கட்சியில் பெரிய ஆதரவு இல்லை. அத்வானி போலவே ராம்ஜெத்மலானியும் கட்காரி மீண்டும் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நேரத்தில்தான், காங்கிரஸ் நடவடிக்கையால் பா.ஜ.க தலைவர் தேர்வில் புதுத் திருப்பம் ஏற்பட்டது.''

""காங்கிரசால் பா.ஜ.க.வில் திருப்பமா?''

""ஆமாங்க தலைவரே.. டெல்லி பா.ஜ.க சீனியர்களே அப்படித்தான் சொல்றாங்க.. கட்காரிக்கு இரண்டாவது ரவுண்டு ஸ்டார்ட் ஆகப் போகுதுன்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்தில், அவரை விசாரணைக்கு கூப்பிட்டு  இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்தது. அவரும் வருவதா ஒப்புக்கொண்ட நிலை யில், திடீர்னு அவருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு ஆரம்பிச்சிடிச்சி. பெயரைக் கெடுப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த மாதிரி செய்யுதுன்னு பா.ஜ.க வட்டாரத்துக்குப் புரிந்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். தரப்புக்கும் வேற வழியில்லை. கட்காரியை கழற்றிவிட்டுவிட்டு புதுத்தலைவரா வெங்கையா நாயுடு, ராஜ்நாத்சிங் பெயர்கள் பரிசீலிக்கப்பட, ராஜ்நாத் சிங் தலைவராயிட்டாரு.''

""வெங்கையா நாயுடு தென்னிந்தியா.. ராஜ் நாத்சிங் வடஇந்தியா.. அதனால அவருக்குத் தானே சான்ஸ் அதிகம்.''

""ஆமாங்க தலைவரே.. ஆனா வெங்கையா வும் ராஜ்நாத்தும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தானாம். இங்கே தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு எதிரா உள்ள குரூப்பெல்லாம் புதுத் தலைவர் நியமனத்தில் சந்தோஷமா இருக்கு. ஏன்னா, பொன்.ராதா கட்காரி ஆளாம். அதனால் தனக்கு போட்டியா இருக்கிற இல.கணேசன் தரப்பு உள்பட பல கோஷ்டிகளை சேர்ந்தவர்களுக்கும் மாநிலப் பொறுப்புகள் கிடைக்காமல் கவனமா காய் நகர்த்தினாராம். அதோடு, வெங்கையா நாயுடுவுக்கும் பொன்.ராதாவுக்கும் ஆகாதாம்.''

""அதே நேரத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் பலரும் அதிர்ச்சியில் இருக்காங்க தெரியுமா?''

""ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கும் அவரோட மகனுக்கும் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் சம்பந்தமான ஊழல் வழக்கில் தலா 10 வருடம் தண்டனை வழங்கி யிருக்குதே கோர்ட்.. அதைத்தானே சொல்றீங்க. அப்பாவும் மகனும் இப்ப ஜெயில் களி தின்னுக் கிட்டிருக்காங்க. எவ்வளவு பெரிய ஆளா  இருந்தா லும் ஊழல் வழக்கில் சிக்கினால் தண்டனைதான்னு நீதிமன்றம் உறுதியா இருக்குது. அதனாலதான் சவுதாலா குடும்பத் துக்கு தண்டனை கிடைச்சிருக்கு. அத னால ஊழல் வழக்கு களை எதிர்கொள் ளும் அரசியல்வாதி கள் எல்லோருமே, தங்களோட வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கு மோன்னு அதிர்ச்சியா இருக்காங்க.''

""கொடநாட்டுக்கு ஜெ. விசிட் அடிச்சாலே பெங்களூரில் நடக்குற சொத்துக் குவிப்பு வழக்கில் கார்டன் தரப்புக்கு சாதகமான விஷயங்கள் நடக்குதுன்னு நம்ம நக்கீரன் ஸ்பெஷல் ஸ்டோரியே எழுதியிருந்தது. அதுபோலவே, இந்த முறையும் கொட நாட்டில் ஜெ. இருந்த சமயத்தில்தான், அரசு வக்கீல் சந்தேஷ் சவுடா இனி ஆஜராகமாட்டேன்னு சொல்லி ஒதுங்கிட்டாரு. கார்டன் தரப்பு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குன்னு போனமுறையே பேசியிருந்தோம்.''

""ஆமாங்க தலைவரை.. இனி எப்போது அரசு வக்கீலை நியமிப்பாங்க.. எப்ப வழக்கு விசாரணை வேகமெடுக்கும்னு கோர்ட் வட்டாரத்திலேயே யாருக்கும் தெரியலையாம். அரசுப் பணிகளை கவனிப்பதற்காகத்தான் கொடநாட்டுக்கு ஜெ. போயிருந்தார். ஆனாலும் ஒரு முக்கியமான விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கலையாம்.''

""என்ன விஷயம்?''

""டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது. இது நம்மை மாதிரி பொதுமக்கள் பெட்ரோல்-டீசல் போடும் பங்க்களில்தான். போக்குவரத்துக்கழகங்கள், பெரிய நிறுவனங்களுக்கான வாகனங்கள் மொத்தமா டீசல் போடும் பங்க்களில் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் விலை உயர்த்தியிருக் காங்க. 50 பைசா எங்கே, 12 ரூபாய் எங்கே? தமிழ்நாட்டில் 7 போக்குவரத்து டிவிஷன்கள் இருக்குது. ஒருநாளைக்கு ஒரு டிவிஷனில் மட்டும் 25லட்ச ரூபாய் கூடுதல் செலவு. மொத்தமா ஒரு நாளைக்கு ஒன்றே முக்கால் கோடி நஷ்டம். அதனால டிரைவர், கண்டக் டரை தவிர மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் தருவது லேட்டாகுதாம். கர்நாடக மாநில அரசு தன்னோட பேருந்துகளை தனியார் பங்க்கில் டீசல் போடச் சொல்லிடிச்சி. தமிழ் நாட்டில் உள்ள பிரைவேட்  பங்க் ஆட்களும் அரசாங்கத் தரப்பை அப்ரோச் பண்ணியிருக் காங்க. ஆனாலும், கொடநாட்டில் இது சம் பந்தமா எந்த முடிவும் எடுக்கப்படலையாம். மலையிலிருந்து ஜெ. ரிட்டன் ஆகிட்டதால, கோட்டையிலாவது சீக்கிரமா முடிவு எடுக்கப்படுமான்னு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எதிர்பார்ப்போடு இருக்காங்க.''


""கடலூர் மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட கலெக்டர் ரத்து செஞ்சிட்டாரே?''

""ராமதாசும் காடுவெட்டி குருவும் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு கலெக்டர் கிர்லோஸ்குமார் தடைவிதிச்சிருந்ததால, அதை எதிர்த்து கோ.க.மணி, வக்கீல் பாலு உள்பட நூற்றுக்கணக்கான  நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான பா.ம.க தொண்டர்களும் வியாழக் கிழமையன்னைக்கு கலெக்டர் ஆபீஸ் முன்னாடி குவிஞ்சிட்டாங்க. கலெக்டரை கோ.க.மணி, பாலு ஆகியோர் சந்தித்துப்  பேசிக் கொண்டிருந்தபோது, ராமதாசிட மிருந்து கோ.க.மணிக்கு போன். வெளியில் வந்துதான் பேசினார். தடையை நீக்கிடுவாங்க.. நீங்க ஸ்ட்ராங்கா வலியுறுத்துங்கன்னு ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அதுபோலவே உள்ளே போய் கோ.க.மணியும் பேசினார்.''

""கலெக்டரோட ரியாக்ஷன் என்னவாம்?''

""மேலிடத்தில் கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக் கிறார். அரை மணி நேரம் கழிச்சி, தடையை நீக்கி உத்தரவு போட்டுவிட்டார் கலெக்டர். அதே நாளில், மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்னாடிதான் மறியல் நடந்தது. அதனால, பா.ம.க தொண்டர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட, இதை சமாளிக்க முடியாமல் போலீசார் லத்தி சார்ஜ் செய்ய, அங்கே ஒரே களபரம். தடை நீக்கப்பட்டதால தைலா புரம் தோட்டத்திலிருந்து கடலூருக்கு வந்த ராமதாஸ், சிகிச்சையில் இருந்த தன் கட்சித் தொண்டர்களைப் பார்த்து ஆறுதல் சொன்னார். கடலூர் எஸ்.பி. யை மட்டும் கண்டிச்சி பேசினார்.''

""அப்படின்னா அ.தி.மு.க.-பா.ம.க. உறவு?''

""மேலிட பேச்சுவார்த்தைகள் தொண்டர்களுக்கு தெரியாதே. அதனால் நடந்த மோதல் இது. தடைநீங்கும்னு டாக்டர் உறுதியா சொன்னதை அறிந்த பா.ம.க.வினர் கூட்டணி வரும்போல என்கிறார் கள்.''

 லாஸ்ட் புல்லட்!

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அரசு முடிவில் தலையிட முடியாது என, மனுவைத் தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், இப்படி மாற்றுவதால் வீண் செலவு ஏற்படாது என்றும், பல்நோக்கு மருத்துவமனை தேவைதான் என்றும் தெரிவித்துள்ளது.
கலைஞரை சந்தித்துவிட்டார் மு.க.அழகிரி. தயாளு அம்மாள் உடல்நலன் சரியில்லாமல் இருப்பதால் அவரை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டு, கடைசியில் வீட்டிலேயே இரண்டு நர்ஸ்களை நியமித்து பார்த்துக்கொள்வதென முடிவு செய் யப்பட்டது. கோபாலபுரம் வீட்டிற்கு வந்த அழகிரி, தன் தாயாரிடம் உடல்நலன் விசாரித்தார். அதன்பிறகு, கலைஞர், அழகிரி, செல்வி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். தி.மு.க மடம் அல்ல என்று அழகிரி பேட்டியளித்ததைப் பற்றி கலைஞர் கேட்க, அப்படியல்ல என்று விளக்கமளித்திருக்கிறார் அழகிரி. அரசியல் நிலைமைகள் பற்றியும் அலசியுள்ளனர். வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாள் என்ற நிலையிலும் கலைஞரின் மதுரை விசிட் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. 
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மனைவி விஜயலட்சுமி கடந்த 24-ந் தேதி அதிகாலையில் காலமானார். அண்மையில்தான் அவரது மகள் தீபா திருமணம் நடந்து முடிந்தது. மீடியாக்கள் ஜெ. அண்ணன் வீட்டு முன்பு குவிய, ஜெ.வும் வருவார் என்ற எதிர்பார்ப்பு உறவினர்களிடம் இருந்தது. ஆனால், ஜெ. வராத நிலையில் இறுதிக்காரியங்கள் நடைபெற்றன. ""நான் இறந்தாலும் அவர் வரமாட்டார். அந்தளவு என் மீது கோபத்தில் இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை'' என்று பலமுறை சொல்லி யிருக்கிறாராம் ஜெ.வின் அண்ணி.

ஜனவரி 25 மிலாடி நபி, 26 குடியரசு தினம், 27 வள்ளலார் தினம் என 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை. எனினும், மறைமுகமாக சரக்கு விற்க ஏற்பாடுகள் நடந்திருப்பதுடன், இந்த விற்பனையைக் கண்டுகொள்ள வேண்டாம் என போலீசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

பல்மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர் பாக தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கும் சி.பி.ஐ., பல இடங்களிலும் ரெய்டு நடத்தி, முக்கிய புள்ளிகளை வரிசை யாகக் கைது செய்து வருகிறது. இதன் தொ டர்ச்சியாக இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவரான மஜூம்தாரை சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட் டுள்ளனர். விரைவில் அவரும் கைது செய் யப்படுவார் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம்.

ad

ad