புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013


இலங்கை அரசை பல தடவை காப்பாற்றிய ராஜிவவுக்கு மகிந்தர் பாடம் புகட்டினார் ?

சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க மீது கடும் நடவடிக்கை எடுக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு முடிவு செய்துள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கடுமையாக விமர்சித்ததாகவும், இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம், மற்றும் வாக்கெடுப்பை புறக்கணித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்
க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா லிபரல் கட்சியின் தலைவரான ராஜீவ விஜேசிங்க முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்னர், சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் இணைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டிக் கொடுத்த சிறிலங்காவின் முக்கிய கல்வியாளர்களில் இவரும் ஒருவர். மேலும் சிறிலங்காவுக்கு எதிராக சுமத்தப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் வன்மையாக மறுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது


ad

ad