புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013




        ரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கலைஞரின் கொள்ளுப்பெயர்த்தியும் மு.க.முத்துவின் மகள் வழிப்பெயர்த்தியும், தொழிலதிபர் கெவின்கேர் ரெங்கநாதனின் மகளுமான அமுதவள்ளிக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி சண்முகராஜேஸ்வரனின் மகன் சித்தார்த்திற்குமான காதல் திருமணம் அது.

இந்த திருமணம் குறித்துப் பேசுவதற்காக கலைஞரை சந்தித்துப் பேச சண்முகராஜேஸ்வரன் சென்றபோது,’"இந்த ஆட்சியில் நம்மை சந்திக்க ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி வந்திருக்கிறாரா?' என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடனேயே அவரை சந்தித்தார் கலைஞர். இந்த விஷயத்தை முதன் முத லில் எழுதியது நக்கீரன்தான். அந்த திருமணம்தான் கடந்த 23-ந் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கத் திலுள்ள ரெங்கநாதனுக்கு சொந்தமான "கவின் சோலை'யில் நடந்து முடிந்திருக்கிறது.

திருமண விழாவுக்கு 9.15-க்கு வந்தார் கலைஞர். அவருடன் மு.க.ஸ்டாலின். கலைஞரை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தனர் ரெங்கநாதன், சண்முக ராஜேஸ்வரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர். கலைஞரின் வலதுபுறம் பொன்முடி, அவருக்கு அருகில் ஸ்டாலின் அமர... கலைஞரின் இடப்புறம் மு.க.முத்து அவருக்குப் பிறகு மு.க.அழகிரி உட் கார்ந்தனர். உறவினர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் வளைய வந்து கொண்டிருந்தனர். தாயார் ராஜாத்தி யம்மாளுடன் வந்த கனிமொழி பார்வையாளராக கீழேயே அமர்ந்துகொண்டார். மு.க.முத்துவைப் பார்த்து "வணக்கம் அண்ணே' என்று சொன்ன ஸ்டாலின், அழகிரிக்கு வணக்கம் சொல்லவில்லை. அவரைப் பார்த்து சிரிக்கக்கூட இல்லை. அழகிரி இயல்பாக ஸ்டாலினை திரும்பித் திரும்பி பார்த்தபோதுகூட ஸ்டாலின் ஏனோ  அவரை பார்ப்பதை தவிர்த்தார். 

மணமகனும் மணமகளும் அன்னப்பறவையுடன் வடி வமைக்கப்பட்ட ரதத்தில், தனித் தனியாக திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். மேடை ஏறிய மணமக்கள் கொள்ளு தாத்தா கலைஞரின் காலில் விழுந்து வணங்கினர். மணமக்கள் பரஸ்பரம் மாலை மாற்றிக் கொண்டதும் மணமகளுக்கு தாலி கட்டினார் மணமகன். அப்போது, "மணமக்கள்' என்று ஒருவர் மைக்கில் சொல்ல "வாழ்க, வாழ்க' என்று உறவினர்கள் குரல் எழுப்பி வாழ்த்தினர். 
இதனையடுத்து, மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு அரங்கேறியது. கனிமொழி பேசியபோது, ""தமிழகத்தின் இப்போதைய சூழலில் தி.மு.க. குடும்பத்தில் பெண்ணெடுத்த மணமகனின் தந்தை போலீஸ் அதிகாரி துணிச்சல்காரர்'' என்றார். அதேபோல பொன்முடி, ""எங்களைப் பார்த்து அதிகாரிகள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் போது இவர் சம்பந்தம் வைத்துக்கொள்ள நினைத்தது பெரிய தைரியம்தான்''’’என்று நாட்டு நிலவரத்தைச் சுட்டிக்காட்ட, அனைவரும் கலகலவென சிரித்தனர். இத னையே தனது பேச்சிலும் எடுத்துச்சொன்ன மு.க.அழகிரி, ""எங்க குடும் பத்துல நிச்சயம் பண்றாருன்னு தெரிஞ்சதுமே சண்முகராஜேஸ்வரனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணுனாங்க. இனி ரிட்டயர்டு ஆகுறதுக்குள்ளே என்ன பாடுபடுத்தப்போறாங்களோ'' என்றபோது மீண்டும் அதே சிரிப்பு.    

""அண்ணா முதல்வராகவும் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த காலக்கட்டம் அது. அந்த காலக்கட்டத்தில் எனக்கும் மு.க.முத்துவுக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு அரசியல் மாச்சரியங்களையெல்லாம் தவிர்த்து ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வந்திருந்தனர். அரசியலில் அப்படியொரு நாகரிகம் இருந்தது. ஆனா, அது இப்போது இருப்பதில்லை. அப்படி ஆக்கிவிட்டனர்''’ என்றார் முரசொலி செல்வம்.

இறுதியில் பேசிய கலைஞர், முரசொலி செல்வம் சுட்டிக்காட்டிய அரசியல் நாகரிகத்தை விவரித்துவிட்டு, ""இன்றைக்கு கட்சி வேறுபாடில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிற அரசியல் பண்பாட்டை நாம் எடுத்துச் சொன்னாலும் கூட அதைப் பின்பற்றுகிற அரசியல் தலைவர்களும் முன்னோடிகளும் இல்லை. நேர்மையும் நாணயமும் நல்வழியில் செல்கிற மனப்பான்மையும் இருந்தால் எந்த ஒரு அதிகாரியும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அப்படிப்பட்ட நேர்மையானவராக, நாணயமிக்கவராக, உறுதி உள்ளவராக, துணிச்சல் உள்ளவராக சண்முகராஜேஸ்வரன் இருக்கிறார்'' என்றவர் மணமக்களை வாழ்த்தி முடித்தார்.

அடுத்து, கலைஞருடன் மணமக்களும் உறவினர்களும் இணைந்து நிற்கிற மாதிரியான குரூப் ஃபோட்டோ எடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது ஸ்டாலினையும் அழகிரியையும் தம்பக்கம் இழுத்து நிறுத்தி னார் மு.க. முத்து. அப்போது மிக அருகருகே இருந்தும் அழகிரியிடம் முகம் கொடுக்கவில்லை ஸ்டாலின். அதேபோல, முரசொலி செல்வமும் ஸ்டாலினும் பேசிக்கொண்டிருந்தபோது... அங்கே வந்த அழகிரி, செல்வத்திடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போதும் அழகிரியிடம் பேசுவதை தவிர்த்தார் ஸ்டாலின். குரூப் ஃபோட்டோ முடித்ததும் ஒரு தட்டில் டிஃபன் எடுத்து வந்த உறவினர் ஒருவர் அதனை மணமக்களிடம்  கொடுக்க, டிஃபனை கொள்ளுத் தாத்தா கலைஞருக்கு மணமக்கள் மாற்றி மாற்றி ஊட்ட, ""போதும்... போதும்... நான் சாப்பிட் டுட்டுத்தான் வந்தேன்மா'' என்று ஒரு குழந்தையைப் போல அடம் பிடித்தார் கலைஞர்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் குடும்பத் திருமணம் ஆரவாரமில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. மணமக்களை வாழ்த்திய உறவினர்கள், ""இன்னும் ஒரு வருஷத்துல கொள்ளுத் தாத்தா கலைஞரை எள்ளுத்தாத்தாவாக ஆக்கணும்'' என்று சொல்ல, மணமக்கள் மட்டுமல்லாது அவர்களைச் சுற்றியிருந்த பெண்களும் வெட்கப்பட அந்த இடம் சிரிப்புகளால் அதிர்ந்தது.

-ஆர்.இளையசெல்வன்
படங்கள் : எஸ்.பி. சுந்தர்

ad

ad