புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி
ஆட்டத்தில் வெற்றிபெற முயற்சிக்கும். எனினும் வட இந்தியாவில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்களில் இங்கிலாந்து தோல்வி கண்டுள்ளது.

தொடரை வென்றுவிட்டதால் இந்த ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெüதம் கம்பீரும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ûஸத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே மூத்த வீரரான சேவாக் நீக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் கம்பீருக்கும் இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இதேபோல் யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளித்துவிட்டு, சேதேஷ்வர் புஜாரா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட புஜாராவுக்கு பிசிசிஐ அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர் அறிமுக ஆட்டத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

ad

ad