புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


தலித் பெண்ணான வித்யாவின் குடும்பம், ஆதிக்க சாதியினைச் சார்ந்த விஜிய பாஸ்கரின் திருமணத்தினை ஒப்புக்கொண்டது.. ஆனால், விஜிய பாஸ்கரின் குடும்பம் இதற்கு ஒப்புதல் அளிக்காததினால், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய அவர் வித்யாவை நிற்பந்தித்துள்ளார். இதற்கு மறுத்த வித்யாவின் மீது, அவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், டெல்லி சம்பவத்திற்கும், ஏன் வினோதினிக்கும் கூட குரல் கொடுத்தவர்கள், வித்யா என்னும் தலித் பெண்ணினை ஏறெடுத்தும் இன்னமும் பார்க்கவில்லை.. 

மிகவும் ஏழைக் குடும்பத்தினை சேர்ந்த வித்யா, தனியார் மருத்துவமனை செல்லும் வசதியற்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை(!) பெற்று வருகின்றார்.. 

தீப்புண் காயப் பிரிவில் அவரினைக் சேர்த்து, சரியாக மருத்துவம் அளிக்காத காரணத்தினால், அவரின் நிலைமை மிக மோசமாக மாறி உள்ளது. மேலும், அவரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றது..

மேலும், அவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மருத்துவமனையில் இருக்கும் காரணத்தால், வித்யாவின் தாய் வேலைக்கு செல்லவில்லை..அவர்களின் தற்சமய தேவையை பூர்த்தி செய்து கொள்ளவே மிகவும் கடினப்படுகிறார்கள்..

"தமிழக மக்கள் கட்சி", "சேவ் தமிழ்ஸ்" மற்றும் தோழர்கள் இணைந்து, இப்ப்பிரச்சினை தொடர்பான செய்திளை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர்..
மேலும், தோழர் Aiswarya Rao அவர்களின் உதவியினைக் கொண்டுதான் வித்யாவை ICUவிற்கு நேற்றைய முன்தினம் மாற்ற இயந்தது..
 — with Prabakar Kappikulam and 41 others at KMC.

ad

ad