புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஐநா பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வழங்குவார் என பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad