புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013



இது தொடர்பாக  மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் ,


மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை வைகோ மேற்கொண்டுள்ள 9-ஆவது நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி, மேல்மருவத்தூர்-சோத்துப்பாக்கத்தில் நடைப்பயணம் புறப்படும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் வைகோவை சந்தித்து, அவருக்கும் இந்நடைப்பயணத்தில் வருகின்ற தோழர்கள் அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் குமரி ஆனந்தன் அவர்களும் உடன் நடந்தே வந்து வாழ்த்திப் பேசியதாவது,

“தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவும் உறுதியோடும், எதற்கும் அஞ்சாத நெஞ்சோடும் அறப்போராக நடந்து வருகின்ற வைகோ அவர்களுக்கும், உடன் வருகின்ற சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைக் கூறுகிறேன். மதுவின் கொடுமையால் தமிழகம் பாழாகின்றது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க தூய்மையான நோக்கத்தோடு தன்னலமின்றி வைகோ போராடுகிறார்.

தேசப்பிதா அண்ணல் காந்தியார் வாழ்த்துகிறார்; உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் வாழ்த்துகிறார்; பெருந்தலைவர் காமராஜர் வாழ்த்துகிறார்; பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார்; வறுமையில் வாடும் ஏழைத் தாய்மார்கள் வாழ்த்துகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு தமிழக மக்களின் நல் ஆதரவை வேண்டுகிறேன்.

மதுவை ஒழிக்கும் அறப்போரில் வைகோ வெல்வது நிச்சயம்.”

இவ்வாறு குமரி அனந்தன் வாழ்த்திய செய்தியை வெளியிட்டுள்ளது.

ad

ad