புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


இலங்கை விவகாரம்! சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் திமுக, அதிமுக, பாஜக வெளிநடப்பு
லோக்சபாவில் இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் கடுப்பாகிப் போன திமுக, அதிமுக என அனைத்து கட்சி தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து பாஜக எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர். லோக்சபாவில் இன்று காலை முதல் பல்வேறு கட்சி எம்.பிக்களும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்திய அரசு, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த விவாதத்தின் முடிவில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வகை செய்வோம். 13-வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாண்டியும் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம்.
இலங்கை அண்டை நாடு. அந்த நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை.
முடிவெடுக்கும் போது உங்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படும்.
இலங்கை மீது கோபப்படுவது மட்டும் தீர்வாகிவிடாது. இலங்கையில் நடந்திருப்பது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சனை. இதற்கு தீர்வு காண நீண்டகாலமாகும்.
இந்தியா பெரியண்ணன் பாணியில் அல்லது உலக போலீஸ்காரனாக செயல்பட முடியாது. என்று பேசிக் கொண்டிருந்தார்.
இதில் கடுப்பாகிப் போக திமுவின் டி.ஆர். பாலு எம்.பி., எப்பவுமே இதே பதிலை சொல்லிக் கொண்டிருந்தால் என்று கொந்தளித்தார். அதன் பின்னர் அவருக்கு ஆதரவாக அதிமுகவின் தம்பித்துரை காட்டம் காட்டினார்.
திரும்பவும் சொன்னதையே சல்மான் குர்ஷித் சொல்லிக் கொண்டிருக்க,, நீங்க இப்படி பேசிகிட்டே இருங்க..நாங்க வெளியே போகிறோம் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மீண்டும் பேசத் தொடங்கிய போது, பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா எழுந்து, தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வீடு கட்டிக் கடுத்தோம் என்று குர்ஷித் பேசினார்.
இதனால் பாஜகவினரும் அதிருப்தி அடைந்து கண்டனத்தையும் முழக்கத்தையும் பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.
சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு லோக்சபாவின் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிவிட சபையே காலியாகத்தான் இருந்தது.
2ம் இணைப்பு
யுத்தத்தில் கற்றுக்கொள்ளாத படிப்பினைகளை இராஜதந்திர உறவுகளின் மூலம் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும் - சல்மன் குர்ஷித்
யுத்தத்தில் கற்றுக்கொள்ளாத படிப்பினைகளை இராஜதந்திர உறவுகளின் மூலம் இலங்கைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றில் இன்று இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
இலங்கைத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
குறுகிய கால அடிப்படையிலான தீர்வுத் திட்டங்கள் முன்வைப்பதில் பயனில்லை.
இலங்கைக்கு இந்தியா ஆலோசனைகளை வழங்கப் போவதில்லை,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
விரைவில் இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்படும் என சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமான உடனயே திமுக உறுப்பினர்கள் அவையை வெளிநடப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad