புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


முன்னாள் அமைச்சர் ராஜா பையா மீது கொலை வழக்கு பதிவு
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பலிபுரா கிராமத் தலைவர் நான்ஹே யாதவ் கடந்த 2-ம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
கலவரத்தை அடக்கச் சென்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் சுட்டுக்கொல்லப்பட்டார். கிராமத் தலைவரின் தம்பியான சுரேஷ் என்பவரும் கலவரத்தில் பலியானார்.

இதற்கிடையே டி.எஸ்.பி. ஜியா கொலைக்கு மாநில அமைச்சர் ராஜா பையா காரணம் என புகார் எழுந்ததை யடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
இதற்கிடையே இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட ஜியாவின் மனைவி பர்வீன் ஆசாத் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜா பையா மீது சி.பி.ஐ. கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னதாக அவர் கொடுத்த புகாரின்பேரில் உ.பி. போலீசார், ராஜா பையா மீது குற்றச்சதியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ராஜா பையா தவிர மேலும் 4 பேர் மீதும் கொலை, குற்றச்சதி, கலகம் ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டும் வகையில் அவமதித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் விரைவில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. 
முதற்கட்டமாக உ.பி. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்குகிறது. இதற்காக சிறப்பு விசாரணைக்குழு இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஐ. விசாரணையில் நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், எந்த அரசியல் நெருக்கடியின் கீழும் சி.பி.ஐ. வரக்கூடாது என்றும் ஜியாவின் மனைவி பர்வீன் ஆசாத் தெரிவித்தார்.

ad

ad