புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம்
மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார் அனுமதி அளித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார் அனுமதி அளித்தார்.
விவாதத்தை தொடக்கி வைத்து டி.ஆர்.பாலு பேசியதாவது,
நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களாக யார் இருந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கை ஒன்றும் மாறவில்லை. டெசோ தீர்மானங்களை நாங்கள் கொடுத்த போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் நிலை என்ன என்பதே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டவர் பலரதும் கேள்வியாக இருக்கிறது. இப்போதாவது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. அதற்கு முன்பாக புனர்வாழ்வுப் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். புலம் பெயர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் கதி என்ன? இலங்கை அரசு தமது சொந்த மக்களையே இனப்படுகொலை செய்திருக்கிறது. இலங்கை தமிழர் பிரதேசங்களில் 49 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் சித்திரவதைக்குள்ளாகினார். தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அண்மையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அம்பலப்படுத்தியிருக்கிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது இனப்படுகொலையை வெளிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிராக திட்டமிட்ட சித்ரவதையும் படுகொலையும் இனப்படுகொலையே.
இதேபோல் தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கை ராணுவம் திட்டமிட்டு சீரழித்ததும் இனப்படுகொலையே. இலங்கையில் 367 இந்து கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. 89 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளன. இது ஒரு கலாச்சார இனப்படுகொலை. பெர்லின் நூலகத்தில் யூதர்களின் கலாச்சாரத்தை சொல்லக் கூடிய பல்லாயிரக்கணக்கான நூல்களை ஹிட்லர் எரித்தார். இதுதான் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து சர்வதேச போர் விதிகளையும் இலங்கை மீறி அப்பாவி பொதுமக்களை, பெண்களை படுகொலை செய்தது. அப்படிப்பட்ட போர்க் குற்றம் புரிந்த நபருக்கு தமிழரின் ரத்தக் கறைபடிந்த கையோடு வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு எப்படி கொடுத்தது இந்திய அரசு?
பிரபாகரனின் மகன் 12 வயது பாலச்சந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பொருட்களை கொடுத்துவிட்டு 10 நிமிடத்திலேயே கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கை ராணுவம். ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்துவிட்டான் பாலச்சந்திரன். ஆனால் அதற்கும் மேல் 4 முறை சுட்டு படுகொலை செய்திருக்கிறது இலங்கை ராணுவம், யூகோஸ்லோவியாவில் 1991-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக 1992-ம் ஆண்டு ஐ.நா. சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்டது. சிரியா, போஸ்னியா, வடக்கு சூடான் அதிபர்களுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு எதிரான ஏன் போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது?
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்னவானது? 25 ஆண்டுகளாகிவிட்டதே.. என்ன நடந்தது.. ஒன்றுமே நடைபெறவில்லையே.. இந்தியா-இலங்கை ஓப்பந்தப்படியான 13வது அரசியல் சாசன திருத்தம் என்னவானது? இலங்கை அதிபர் உட்பட அனைவருமே 13-வது அரசியல் சாசன திருத்தத்தை ஏற்க மறுக்கின்றனரே.. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கையின் போர்க் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
 

ad

ad