புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்:
சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று (08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
. thx nakeeran

 அப்போது பேசிய மாணவர்கள், இலங்கையில் லட்சக்கணக்கில் நம் தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதைவிட திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதுதான் உண்மை. இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது என்பது புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு குட்டி தீவுதான். அதற்கு ஏன் இந்தியா பயப்பகிறது? 
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும். தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. இதற்காக நாங்கள் கடைசி வரை போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர். 
படங்கள்: அசோக்
 

ad

ad