புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013

ஆவடி : ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் லாரி மோதி பலி
 
ஆவடியை அடுத்த வீராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரெட்டியப்பன் மகன் வெங்கடேஷ் (வயது19). தனியார் கல்லூரி பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராவ் மகன் நரேஷ் (17) 10-ம் வகுப்பு மாணவர்
. தாம்ஸ் மகன் பிரேம் சாகர் (18). 3 பேரும் நண்பர்கள்.
 
நேற்று மாலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆவடி நோக்கி வந்தனர். மோரை அருகே வந்தபோது அங்குள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்குள் திரும்பிய லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், நரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரேம்சாகர் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைப்பார்த்து பயந்து போன டிரைவர் லாரியில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்துவிட்டு டிரான்ஸ்போர்ட் செட்டில் நிறுத்தி தப்பி சென்றுவிட்டார்.
 
விபத்து பற்றி அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய பிரேம்சாகரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
 
3 பேர் பலியானதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடினர்.
 
அப்போது டிரான்ஸ்போர்ட்டுக்குள் கழுவிய ரத்தக் கறையுடன் நின்ற லாரியை கண்டு பிடித்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கிருந்த 3 லாரிகளையும் அடித்து நொறுக்கினர். இத னால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.
 
ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் உதவி கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் முகமது முத்தலீப் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்.
 
ஆனால் அவர்கள் சமாதானத்தை ஏற்காமல் உடனடியாக விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என்றனர். டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் இரவு 11 மணி அளவில் கலைந்து சென்றனர்.
 
இன்று காலை விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவாரூரைச் சேர்ந்த தனசேகரனை போலீசார் கைது செய்தனர்.
 

ad

ad