புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


பி.ஆர்.பி. மகன் உட்பட 9 பேர் கைது
மதுரை மேலூர் மற்றும் கீழவளவு போலீசார் மதுரை எஸ்.பி. அலுவலத்தில் குவாரி சம்பந்தமான புகார் இருப்பதாக கூறி, விசாரணைக்கு அழைத்து செல்ல வந்துள்ளோம்
என கிரானைட் மன்னன் பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார், அவரது மைத்துனர் தெய்வேந்திரன், அவரது மேனேஜர் ஜோதிபாசு, அவரது குவாரி மேனேஜர் ஆறுமுகம், மேலும் ஒரு குவாரி மேனேஜர் ஆறுமுகம், மற்றும் அவரது உதவியாளர்கள் அனுமந்தன், பரமானந்தன், பசுவராஜ், ஐய்யப்பன் ஆகிய 9 பேரை இன்று காலை 8மணிக்கு அவரவர் இல்லத்தில் இருந்து போலீஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர் போலீசார்.


மாலை 4 மணிக்கு விசாரணை முடிந்து மேலூர் வி.ஏ.ஓ. அக்பர் சேட்டு புகாரின் பேரில் கோட்டைவீரன் என்ற கிராமத்திலும் , நாவினிபட்டி என்ற கிராமத்திலும் 227/பி. அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக 9 பேரையும் கைது செய்வதாக மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்கு வந்த பி.ஆர்.பி. மகன் உட்பட 9 பேரும் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் வைத்து வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர்.  பி.ஆர்.பி. மற்றொரு மகன் செந்தில்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ad

ad