புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


அரசில் நீடிப்பதா? வெளியேறுவதா? முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு! முக்கிய கூட்டம் நாளை!
முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? அல்லது ராஜினாமா செய்வதா? என்று முடிவெடுக்க முடியாத திரிசங்கு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திர் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பாக நேற்றுக்காலை முதலே தீவிரமாக ஆராய்ந்துள்ளது.
கட்சியின் முக்கியஸ்தர்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நேற்று காலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் கூடி ஆராய்ந்தனர்.
நேற்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீடம் கூடி இரவு வரை இது குறித்து விரிவாக ஆராய்ந்து கொண்டிருந்தது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக் கெடுபிடிகள் வன்முறைகள் குறித்து விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றைக் கூட்டும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி இதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றைக் கூட்டத் தேவையில்லை என்றும் இது தொடர்பாக நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஆராய முடியுமென்று என்று தெரிவித்தது குறித்தும் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை, முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்துஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ.ஹசன்அலி அதன் பின்னரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயம் குறித்து தீவிரமாக ஆராய்வதற்கு முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டமொன்றை நாளை திங்கட்கிழமை கூட்டவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது முதல் அநுராதபுரம், குருநாகல், தெதுறுஓயா பள்ளிவாசல், ராஜகிரிய ஒபேசேகரபுர, தெஹிவளை ஆகிய இடங்களிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுபல சேனா என்ற அமைப்பு ஹலால் பிரச்சினையை பூதாகாரமாகப் பெரிதுபடுத்தி ஹலால் முத்திரை குறித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து ஹலால் முத்திரை வழங்குவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கைவிட்டது.
இந்நிலையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் மகரகம நகரில் ஆர்ப்பாட்டமொன்று சில வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த வியாழனன்று இரவு பெப்பிலியானவிலுள்ள முஸ்லிம் படவை நிறுவனமொன்றின் களஞ்சியசாலை மீது சுமார் 100 பேர் அடங்கிய கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டது.
இச் சம்பவம் சமீபத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சம்பவமாகும்.
இந்தத் தாக்குதல் காதல் விவகாரமொன்றின் எதிரொலி என பொலிஸ் தரப்பினரால் கூறப்படுவது உண்மையை திசை திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி என முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ad

ad