புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


மாத்தளை பாரிய மனித புதை குழிக்கு அருகாமையில் இராணுவ சித்திரவதைக் கூடம் காணப்பட்டது?
மாத்தளையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிக்கு அருகாமையில் இரணுவ சித்திரவதைக் கூடமொன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கட்டிட நிர்மாணப் பணிக்காக தோண்டிய போது இந்த பாரிய மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் 150 பேரது சடலங்கள் இந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பாடசாலையொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1989-90களில் மாத்தளை விஜய வித்தியாலயத்தில் இந்த சித்திரவதைக் கூடம் இயங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்த சித்திரவதைக் கூடத்தில் துன்புறுத்தப்பட்ட சிலர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் உண்மைகளை அம்பலப்படுத்துவார்கள் எனவும் முன்னணி சோசலிச கட்சி அறிவித்துள்ளது.
கஜபா படையணிக்கு சொந்தமான சித்திரவதைக் கூடமே இந்த பாடசாலையில் இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளை பரிசோதனை செய்த போது உயிரிழந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

ad

ad