"நேத்து ராத்திரி... யம்மா' என சிணுங்கி சிலிர்க்க வைத்த "சிலுக்கு' ஸ்மிதாவின் கடைசி இரவு மர் மத்தை உடைக்கப் போகிறது ஒரு திரைப் படம்... என தென் னிந்திய சினிமா வட்டா ரங்களில் திகிலைக் கிளப்புகிறது ஒரு தகவல்.nakeran
1960-ல் பிறந்த சிலுக்கு 1980-களில் "சிலுக்கு இல்லாம படமே ஓடாது' என்கிற மவுசை உண்டாக்கி... இந்திய சினிமாவையே தன் கடைக் கண் வீச்சில் மயக்கி வைத் திருந்தார். 1996 செப்டம்பர் 23-ந் தேதி சிலுக்கு தற் கொலை செய்துகொண் டார்... என்கிற செய்தியை இன்றளவும் ஜீரணிக்க முடி யாமல் வேதனைப்படு கிறவர்களும் உண்டு.
"டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் இந்தியில் சிலுக்கு கதை படமானது. 18 கோடியில் தயாரிக்கப் பட்ட இந்தப் படம் உல கம் முழுக்க சுமார் 120 கோடி ரூபாயை வசூலித்த தோடு... சிலுக்காக நடித்த வித்யா பாலனுக்கு "2012-ன் சிறந்த நடிகை' என்கிற தேசிய விருதும் கிடைத்தது.
இதையடுத்து ராக்கி சாவந்த் நடிக்க வங்காள மொழியிலும், வீணா மாலிக் நடிக்க கன்னடத்திலும், சானா கான் நடிக்க மலை யாளத்தில் "க்ளைமாக்ஸ்' என்ற பெயரி லும் "நடிகை யின் டைரி' என்ற பெயரில் தமிழிலும் சிலுக்கின் கதை தயாராகி வருகிறது.
""எனது சகோதரியின் வாழ்க்கையை களங்கப்படுத்தி படமெடுக்கக் கூடாது'' என சிலுக் கின் சகோதரர் நாகவரபிரசாத் "டர்ட்டி பிக்சர்ஸ்' படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொண்டபோது, "இது சிலுக்கின் கதையில்லை. ஒரு ஐட்டம் டான்ஸ் நடிகையின் கதை' என சட்ட விளக்கம் கொடுத்தார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். அந் தப் படத்தில் நடிகை தற்கொலை செய்து கொள்வதுபோல் இறுதிக் காட்சி இடம் பெற்றது. ஆனால், ""க்ளைமாக்ஸ்' மற்றும் "நடி கையின் டைரி' இறுதிக் காட்சி யில் நடிகை கொல்லப்படுவது போல் காண்பிக்கப் போகிறார் கள்' என படபடக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
விஜயலட்சுமி "வண்டிச் சக்கரம்' படத்தில் ஸ்மிதா என பெயர் மாறி "சாராயக்கடை சிலுக்கு' கேரக்டரில் நடித்ததால் "சிலுக்கு'வாக புகழ் பெற்றார் என்றாலும் அதற்குமுன், "இணை யே தேடி' என்கிற மலையாளப் படத்தில் நடித்திருந்தார்.
சிலுக்கை ஆரம்பம் முதலே நன்கு அறிந்த பிரபல மலையாள போட்டோகிராபரும் டைரக் டருமான ஈஸ்ட்மென் ஆண்டனி "க்ளைமாக்ஸ்' "நடிகையின் டைரி'க்கு கதை எழுதியிருக்கிறார். பல சூப்பர் ஹிட் படங்களின் டைரக்டர் அனில் இயக்கியிருக் கிறார். சிம்புவுடன் "சிலம்பாட் டம்' படத்தில் நடித்த சானாகான் இந்தப் படத்தில் ஒரு நடிகை யாகவே தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
சிலுக்கின் கடைசி இர வான 22-09-1996-ல் நடந்த மர்மம்தான் புதிய சர்ச்சையை கிளப்புவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
அது என்ன?
ஒரு நடிகையின் வீட்டில் வேலை பார்க்கும் ஸ்மிதாவுக்கு அங்கே அவமானம் ஏற்பட... ஒரு புரொடக்ஷன் நிர்வாகி மூலம் சினிமாவுக்குள் நுழைந்து பெரிய நடிகையாகிவிடுகிறார். ஒருநாள் ஒரு இக்கட்டான சம்பவத்தில் ஸ்மிதாவை காப்பாற்றுகிறார் ஒரு தாடிக்காரர். அவரோடு "புரிதல்' ஏற்படுகிறது. தாடிக்காரர் திருமணமானவர் என்கிற உண்மை தெரியாது ஸ்மிதாவுக்கு. ஒரு கட்டத்தில் தாடிக்காரரின் மகன், ஸ்மிதாவின் அழகில் மயங்கி அவரை காதலிக்கிறார். தாடிக்காரர் மகனை கண்டிக்கிறார்.
"வாழ்ந்தா ஸ்மிதாவோட வாழ்வேன், இல்லேன்னா செத்துப்போவேன்' என்கிறான் மகன். கோபமான தாடிக்காரர், "நான் போதாது என் மகனும் வேணுமா?' என்கிறார். "அவன் ஒருதலையா ஆசைப்பட்டா... நான் என்ன பண்ண முடியும்?' என்கிற ஸ்மிதாவின் நியாயத்தை ஏற்க மறுக்கும் தாடிக்காரர், ஸ்மிதாவுடன் சண்டைக்கு நிற்க... "அப்படியானால் என் சம்பாத்தியம் முழுவதையும் திரும்ப என்னிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறு' என்கிறார் ஸ்மிதா.
ஒருபுறம் தான் வாழ்ந்த ஸ்மிதா மீது ஆசைப்படும் மகன், மறுபுறம்... சொத்தை திரும்பக் கேட்கும் ஸ்மிதா... இந்த நிலையில்தான் ஸ்மிதா கொலையாகிறார்.
...இப்படி திடுக்கிட வைக்கிறது கதைச் சம்பவம். கேரள-ஆந்திரா தவிர உலகம் முழுக்க "நடிகையின் டைரி'யை டிஜிட்டல் தியேட்டர்ஸ் சார்பில் வெளியிடுகிறார் ஹெச்.ஏ.கே.
இந்நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூஸரும் "சிலந்தி' டைரக்டருமான ஆதிராமிடம் இதுபற்றிக் கேட்டோம்.
""இந்திய சினிமாவில் மாபெரும் சகாப்தம் படைத்தவர் சிலுக்கு. ஆரம்ப காலத்திலிருந்து சிலுக்குவின் வழிகாட்டியாகத் திகழ்ந்த ஈஸ்ட்மென் ஆண்டனி இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். இது... திரைவானில் பிரகாசமாக ஜொலித்தாலும் சொந்த வாழ்வில் இருள் சூழ்ந்த ஒரு நடிகையின் கதைதான். படம் பார்ப்பவர்களுக்கு இது சிலுக்கின் கதையாகத் தோன்றினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல'' என நழுவினார் ஆதிராம்.
ஒரு பிரபல நடிகையின் மரணத்தில் இந்தப் படம் புதிய பரபரப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-இரா.த.சக்திவேல்