புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013




         ""ஹலோ தலைவரே...…அரசியல்னாலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சகஜம்..''

""தெரிந்ததுதானே.. திடீர்னு சொல்றியே?''nakeeran

""டெல்லி டூ சென்னை கனெக்ஷன் பற்றி சொல்றேங்க தலைவரே... ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எல்லாக் கட்சிகளின் ஆதரவும் தேவைன்னு சோனியா விரும்புறாராம். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க கழன்றுவிட்ட நிலையில், அ.தி.மு.க.வின் தயவை காங்கிரஸ் மேலிடம் நாட ஆரம்பித்திருக்கு. நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கமல்நாத் இது சம்பந்தமா அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன்கிட்டே பேச, அவர் ஜெ.கிட்டே இது பற்றி கேட்டிருக்கிறார்.''

""ஜெ.வின் ரிப்ளை என்னவாம்?''

""கமல்நாத்தோடு கான்ஃப்ரன்ஸ் கால் போடும்படி மைத்ரேயன்கிட்டே ஜெ. சொல்லி யிருக்கிறார். அதன்படி ஜெ., மைத்ரேயன், தம்பிதுரை, கமல்நாத் நால்வரும் கான்ஃபரன்ஸ் காலில் இணைஞ்சிருக்காங்க. ஆனா ஜெ. லைனில் இருப்பது கமல்நாத்துக்குத் தெரியாதாம். நாடாளுமன்றக் கூட்டத் தொட ரில் அ.தி.மு.க.வின் ஆதரவை  சோனியா எதிர்பார்ப்பது பற்றி மைத்ரேயன்கிட்டேயும் தம்பிதுரை கிட்டேயும் சொன்ன கமல்நாத், காங் கிரசின்  தற்போதைய மனநிலை பற்றி யும் சொல்லி தி.மு.க.வை விமர்சித்திருக் கிறார். அதையெல்லாம் கான்ஃபரன்ஸ் லைனில் இருந்தபடியே ரசிச்சாராம் ஜெ.''

""ஒரு கட்டத்தில் ஆதரவு, இன்னொரு கட்டத்தில் எதிர்ப்பு இதெல்லாம் வழக்கம்தானே.''…

""ஆமாங்க தலைவரே.. ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் பிடிச்சிடணும்னு தே.மு.தி.க கணக்குப் போடுது. அதற்கு தி.மு.க.வின் ஆதரவு இருப்பதாகவும், மு.க.ஸ்டாலினும் விஜயகாந்த் மச்சான் சுதீஷும் இது சம்பந்தமாகப் பேசிவிட்டார்கள் என்றும் சம்பந்தப் பட்ட ஏரியாக்களிலிருந்து தகவல் வருது. பதவி காலி யாகும் தி.மு.க ராஜ்யசபா எம்.பிக்களில் கனிமொழி, தனக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் வேண்டாம்னு சொல்லிட்டாராம். விஜயகாந்த்தின் நண்பரான திருச்சி சிவா என்ன மூவ் பண்ணப்போறாருன்னு தெரியலை.''

""தே.மு.தி.கவுக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சிடக் கூடாதுன்னுதானே ஏற்கனவே 5 எம். எல்.ஏக்களை ஆளுந் தரப்பு வெளியே இழுத்தது. இப்ப 6 பேரை அரை வருசத்துக்கு சஸ்பெண்ட் செய் திருக்கு. இன்னமும் இழுப்பு முயற்சிகள்  தொடருதே.''…

""ஆளுந்தரப்பின் மூவ் தெரிந்தது தானே.. அதேநேரத்தில், சட்டப்பேரவையி லிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல். ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியுமா அப்படிங்கிற விவாதம் ஓடிக்கிட்டிருக்கு. சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் கிட்டே கேட்டால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சலுகைகளையோ உரிமைகளையோ பெற முடியாது என்று பேரவை விதிகளில் இருக்குது. ஆனா, ஓட்டுரிமை பற்றி எந்த  விதியும் இல்லை. அதனால, தேர்தல் நேரத்தில் சபாநாயகர்தான்  இறுதி முடிவு எடுப்பார்னு சொல்றார்.'' 


""இதில் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரமில்லையா?''

""மாநிலத் தேர்தல் ஆணையத்தின்  தலைமை அதிகாரி பிரவீண் குமார்கிட்டே கேட்டேங்க தலைவரே!… சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் 6 பேரின் எம்.எல்..ஏ பதவி பறிபோகலை. அவங்கவங்க தொகுதிகளுக்கு அவங்க தான் எம்.எல்.ஏக்கள். அதனால, ராஜ்ய சபா தேர்தலில் அவங்க ஓட்டளிப்பது சம்பந்தமா ஏதாவது பிரச்சினை ஏற்பட் டால் தலைமைத் தேர்தல் ஆணையத் தோட முடிவுதான் இறுதி முடிவு. சஸ்பெண்ட் செய்யப் பட்டதால் ஒருவர் வாக் களிக்க முடியாது என்று முடிவெடுத்தால், அது பல மாநிலங்களில் சிக்கல் களை உருவாக்கும்னு சொல்றார். சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தால், இந்த 6 மாதகால தண்டனை அளவை மேலும் குறைக்காவிட்டால் ராஜ்யசபா தேர்தலின்போது சபாநாயகரின் அதிகாரம் பெரிதா, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் பெரிதாங்கிற மோதல் பெரியளவில் வெடிக்கலாம் என்கிறார்கள்.'' 

""ராஜ்யசபா எம்.பி தேர்தலைவிட, லோக்சபா எம்.பி. தேர்தலில்தானே அ.தி.மு.க தலைமை அதிக கவனம் செலுத்துது..''

""மாண்புமிகுக்களே அதைச் சொல்லித் தானே அதிகமா கலெக்ஷன் பார்க்குறாங்க.. தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2100 விரிவுரையாளர் கள் பதவி காலியா கிடக்குது. உயர்கல்வித்துறையின் ஒப்புதல் பெற்றே இதை நியமிக்கணும். துறையின் மாண்புமிகு தரப்பிலோ ஒரு விரிவுரையாளர் பதவிக்கு 7 எல்-னு அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்காம். ஒவ்வொரு கல்லூரியிலும் 10 முதல் 40 விரிவுரையாளர் பதவிகள் காலியா இருக்குது.'' 

""அப்படின்னா செம கலெக்ஷனா இருக்குமே?''

""பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் வசூலில் இறங்கிடிச்சி. போஸ்டிங் எதிர்பார்ப்பவர்களும் 20 எல், 25 எல் வரை தரத் தயாராகவே இருக்காங்களாம். இப்போது இந்தப் பதவிக்கு மாதம் 35ஆயிரம் ரூபாய் சம்பளம். விரைவில் யுஜிசியின் புதிய சம்பள அறிவிப்பின் படி 80ஆயிரம் வரைக்கும் உயருமாம். அதனால்  உயர்கல்வித்துறை மாண்புமிகு தரப்பு கேட்கும் தொகையை பல கல்லூரிகளும் வசூலித்துக் கொடுத்தாலும் சிறுபான்மை கல்லூரிகளின் நிர்வாகங்களோ மாண்புமிகு தரப்புக்கு கமிஷன் தர முடியாதுன்னு சொல்லுதாம். மாண்புமிகு தரப்போ, எம்.பி. எலெக்ஷன் வருது. எங்களுக்கு கட்சித் தலைமை நிர்ணயித்திருக்கிற டார்கெட் ரொம்ப அதிகம். ஆனால் என்னால இதுவரை பாதிதான் கலெக்ஷன் பண்ண முடிந்திருக்கு. சொன்ன டார்கெட்டை நிறைவேற்ற முடிய லைன்னா மந்திரி பதவியே காலியாயிடும்னு சொல்லி சிறுபான்மை கல்வி நிறு வனங்களோடு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டி ருக்காம். மார்ச் 31-க்குள் இந்த காலி இடங்களை நிரப்பாவிட்டால் இனி அடுத்த வருடம் வரைக்கும் நிரப்ப முடியாதாம்.'' 

""மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த முடியாம தமிழக காங்கிரஸ் தடுமாறுதாமே?''

""ஆமாங்க தலைவரே.. .. தமிழீழத்துக்கு ஆதர வாப் போராடும் மாணவர்கள் எல்லா இடத்திலும் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரசுக்கு எதிர்ப்பு காட்டிக்கிட்டிருக்காங்க. திருச்சியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்துக்கு மாணவர்கள் காட்டிய எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் காங்கிரஸ்காரர்கள் கடுமையான தாக்குதலில் இறங்கியதைப் பார்த் திருப்பீங்க. ஆனாலும் காங்கிரஸ் கூட்டம் தமிழகத்தில் எங்கு நடந்தாலும் அங்கே திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க மாணவர்கள் முடிவு செய்திருக்காங்க. அதனாலதான் ஞானதேசிகன் தலைமையில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை சென்னை மயிலை மாங்கொல்லையில் எப்படி நடத்துவது, எப்ப நடத்து வதுன்னு ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்காங்க.''

""தேதி, நேரமெல்லாம் ஏற்கனவே முடிவாகியிருக்குமே!''

""மார்ச் 18-ந் தேதியே கூட்டத்தை நடத்தியிருக்கணும். அப்ப தமிழகம் முழுக்க மாணவர்களின்  போராட்டம் தீவிரமா இருந்த தால, ஜெனீவா தீர்மானத்துக்குப் பிறகு கூட்டம் நடத்தலாம்னு மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் வரும் 30-ந் தேதி பொதுக்கூட்டம்னு தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்க முடியாதுன்னு ஜி.கே.வாசன் சொல்லிட்டாராம். அது ஒரு பக்கம் டென்ஷன்னா, காங்கிரஸ் கூட்டம் ஆரம்பிக் கிறதுக்கு முன்னாடியே  மாணவர்கள்  சைலன்ட்டாக வந்து உட்கார்ந்துகொண்டு, கூட்டம் தொடங்கியதும் தங்கள் எதிர்ப்பை எழுந்து நின்று தெரிவிப்பதுன்னு மாணவர்கள் அமைப்பு கள் முடிவு செய்திருப்பதாக மத்திய உளவுத் துறைக்கிட்டேயிருந்து லேட்டஸ்ட் ரிப்போர்ட் வந்திருக்குதாம். அதனால, மயிலை  மாங்கொல்லை பொதுக்கூட்டத்தை நடத்தலாமா ரத்து  செய்யலாமான்னு பார்லிமெண்ட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசிச்சிக்கிட்டிருக்காராம்..''

""சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொண்டால் அதை இங்கே அனுமதிக்க முடியாதுன்னு ஜெ. எழுதிய கடிதத்தையடுத்து, இலங்கை வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் சென்னையில் நடக்காதுன்னு கிரிக்கெட்  வாரியமான பி.சி.சி.ஐ. அறிவிச்சிருக்கே.''…

""மாணவர்கள் போராட்டத்திலேயே இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பவே பி.சி.சி.ஐ. ரெடியா இருந்தது. காலையில் ஜெ. லெட்டர் எழு தியதும், சாயங்காலமே பி.சி.சி.ஐயும் தன்னுடைய முடிவை அறிவிச்சிடிச்சி. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்க இந்த தடைக்கு எதிரா  குரல் கொடுத்திருக்கிறார். விளையாட அனுமதிக்க முடியாது என்றால் ஐ.பி. எல் போட்டிகளைவிட்டே இலங்கை வீரர்கள் வெளியே வரணும்னு சொல்லியிருக்கிறார். இலங் கை அணியில் இருந்த தமிழ் வீரரான முத்தையா முரளிதரனும் இந்தத்  தடைக்கு எதிராகத்தான் இருக்கிறார். இப்போது  சண்டையெல்லாம் முடிந்து  நாங்கள் ஒன்றாக- நன்றாக இருக்கிறோம்னு  சொல்றார். ஆனால், தமிழகத்தின் உணர்வோ இலங்கை வீரர்கள் இங்கே ஆடக்கூடாதுன்னு கொந்தளிக்குது.''

""மற்ற நகரங்களில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடினால் அங்கேயும் போய் எதிர்ப்பு தெரிவிப்போம்னு மாணவர்கள் அறிவிச்சிருக்காங்களே..''

""ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாகும்போது மாணவர்களின் எழுச்சி தெரியும். ஜெ.வைப் பொறுத்தவரை, சென்னையில் இலங்கை வீரர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிப்பதை தடை செய்தார். அப்புறம், ஆசிய தடகளப்போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதாக  இருந்தால் அந்தப் போட்டியை  சென்னையில் நடத்த மாட்டோம் என்று அறிவித்தார். இப்போது, ஐ.பி.எல் லிலும் அதே நிலையைத்தான் எடுத்திருக்கிறார். ஆனால், ஈழத்தில் போர் முடிந்து, இங்கே ஜெ. ஆட்சி அமைந்தபிறகு இதே ஐ.பி.எல். போட்டிகள் நடந்திருக்குது. அப்போது எந்த எதிர்ப்பையும் ஜெ. தெரிவிக்கலை. அதைவிட, அவரோட 1991-96 ஆட்சிக் காலத்தில் அவரே முன்னின்று நடத்திய தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, ஹாக்கி விளையாட்டில் பங்கேற்ற இலங்கை அணிக்கு பா.ம.கவினரும் தமிழுணர்வாளர்களும் கறுப்புக்கொடி காட்டிய போது, இதே ஜெ. போலீஸ்தான் அவர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளியது.''

""பழசையெல்லாம் யார் ஞாபகத்தில் வச்சிருப்பாங்க.. அதுதானே அரசியல்வாதிகளின் பலம்.''

""சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் எதிர்க்கட்சிகளை தனிப்பட்ட முறையில் தாக்கும் நாகரிகமும் ஜெ.வின் ஸ்பெஷாலிட்டி. மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகிய பிறகும், தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு ஏன் ரயில்வே நிலைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்யலைன்னு சட்டமன்றத்தில் ஜெ. கேட்டார். இதற்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அ.தி.மு.க எம்.பிக்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு துறைக்கான நிலைக்குழுவிலும் மற்றொரு கலந்தாய்வுக்குழுவிலும் இருப்பதற்கு மக்களவைத் தலைவர் ஆணை பிறப்பித்து அதன்படி எம்.பிக்கள் செயல்பட்டு வருவதும் வழக் கம்னு குறிப்பிட்டிருப்பதோடு, இப்படிப்பட்ட நிலைக்குழு என்பது அரசியலுக்கும் அரசுக்கும் அப்பாற்பட்ட நியமனம் என்றும் குறிப்பிட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மக்களவை யை நடத்தும் மாற்றுத்தலைவர் குழுவில்  அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை இருப்பதையும் சுட்டிக்காட்டி, முன்னாள் ராஜ்யசபா எம்.பியான ஜெயலலிதாவுக்கு இதெல்லாம் தெரியாதா என்றும் கேட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.''

""எந்தப் பிரச்சினை கிடைத்தாலும் அதில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுறாங்க.''

""ஈழப்பிரச்சினையில் மாணவர்களுக்கு அடுத்தபடியா அதிகப் போராட்டங்களை நடத்துபவர்கள் மீனவர்கள்தான். ஏனென்றால் இலங்கை கடற்படையால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். இப்போது அவர்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி உருவாகியிருக்குது.'' 

""அதைப் பற்றி நான் சொல்றேன். மீனவர் ஐக்கிய முன்னணி என்கிற அந்தக் கட்சியின் பின்னணியில் இருப்பவர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கல்வி நிறுவனங்களை நடத்திவருபவரும்  எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியுமான ஜேப்பியார். இவரும் இவருக்கு நெருக்கமான மைக்கேல் பெர்னாண் டோ, அப்பாராஜ் போன்றவர்கள் ஊர் ஊராகப் போய் மீனவர்களை சந்திக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மீனவர் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார் கள். ஜேப்பியார் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களை முன்னிறுத்துகிறாராம்.''

 செருப்புக்கு ஜெயில் தண்டனை!-ஜெ. ஆர்டர்!

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் ஐ.சி. வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனை போய்ப் பார்த்து கடந்த 27-ந்தேதி நலம் விசாரித்தார் ஜெ.

அப்போது மருத்துவமனையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டிருக் கிறது. இதனால் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறியிருக்கிறார் ஜெ. ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ். மனைவியை பார்ப்பதாக இருந்த புரோகிராம் இதனால் கேன்சலாகியிருக்கிறது. சலசலப்புக்கு காரணமான அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் கருணாநிதி மீது ஜாமீனில் வரமுடியாத படி 341, 353, 323, 506(1) ஆகிய பிரிவுகள் பாய்ந்திருக்கிறது. கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான மருதம் வளாகம் எஸ்.ஐ. ஆசைத்தம்பி "முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த என் மீது மேன் ஹாண்டில் செய்து பணி செய்யவிடாமல் தடுத்தார்' என்பது கருணாநிதி மீதான ஆசைத்தம்பி புகார். தேனாம்பேட்டை போலீசால் எடுக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை. இதனுடைய பின்னணி என்னவென்று விசாரித்தால், ""ஜெயலலிதா அந்த அறைக்கு உள் சென்றபோது டாக்டர் கருணாநிதி "இது ஐ.சி.யூ. வார்டு மேடம், கொஞ்சம் ஷூவை கழட்டிட்டு போங்க' என்று ஆங்கிலத்தில் சொன்னதும் ஜெ.வுக்கு வந்த கோபத்தின் விளைவு தான் இது'' என்கிறது மருத்துவமனை வட்டாரம்.


 லாஸ்ட் புல்லட்!

எம்.பி. தேர்தல் சமயத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர ஜெ. முடிவு செய்துவிட்டார் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், சட்டமன்றத்தில் பேசிய மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மதுபானங்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானம் சமூக விரோதிகளின் கைக்குப் போய்விடும். அந்த வருமானம் அரசு கஜானாவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்படாமல் உள்ளது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தால்கூட பல இடங்களில் போன் செய்தால் போதும். வீட்டுக்கு வந்து மதுபானத்தை டோர் டெலிவரி செய்துவிடுகிறார்கள்'' என்று மது விற்பனைக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ad

ad