புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மூன்றாவது போட்டி பல்லேகெலேயில் நடந்தது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்தார்.
பெரேரா அரைசதம் கடந்து 56 ஓட்டங்களும், சங்கக்காரா 48 ஓட்டங்களும், டில்ஷன் சதம் கடந்து 125 ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் அப்துர் ரசாக் 5 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 13.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணியின் வெற்றிக்கு 27 ஓவரில் 183 ஓட்டங்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வங்கதேச அணி மீதமுள்ள 13.2 ஓவரில் 105 ஓட்டங்கள் எடுக்க வேண்டியதாயிற்று.
அனாமுல் ஹேக் 40 ஓட்டங்களும், ஜஹுருல் இஸ்லாம் 26 ஓட்டங்களும், நசிர் ஹொசைன் 33 ஓட்டங்களும் எடுத்து கைகொடுக்க வங்கதேச அணி 26 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒருநாள் தொடர் 1-1 என்று “டிரா” ஆனது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இலங்கை வீரர் டில்ஷன் தட்டிச் சென்றார்.

ad

ad