புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2013


நஞ்சு வைத்தோம், பலிக்கவில்லை, பின்னர் பெற்றோரை வெட்டிக்கொன்றோம்-கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.

நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன், மகளின் வாக்கு மூலம்

தாயையும் தந்தையும் நஞ்சு வைத்து கொல்வதற்கு ஆரம்பத்தில் திட்டமிட்ட போதிலும் அது வெற்றி அளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வித்ததாக கொல்லப்பட்டவரின் மகள் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த 8ம் திகதி நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு ( 48வயது) அவரது மனைவி விப்ரா ( 41வயது) ஆகியோர் நித்திரையில் இருந்த போது கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தினர். அந்த விசாரணையின் போது கொல்லப்பட்டவரின் மகள் ரகு தக்ஸினாவின் காதலன் சிவநேசராசா அஜந்தன் ( 16வயது) என்பவர் வர்த்தகர் ரகுவுக்கு எச்சரிக்கை விடுத்து சென்ற சம்பவம் தெரியவந்தது.
மகளை காதலிக்க கூடாது என ரகு ஒரு தடவை அஜந்தன் என்ற மாணவனுக்கு எச்சரிக்கை விடுத்த போது உனக்கு செய்து காட்டுறன் வேலை, என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
காவல்துறையினர் அஜந்தன் என்ற அம்மாணவனை கைது செய்து விசாரணை நடத்திய போது பல தகவல்கள் தெரியவந்தது.
இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகளான ரகு தக்ஸினா(16) மற்றும் அவளின் காதலன் சிவநேசராசா அஜந்தன்(16) கித்துள் கரடியனாற்றை சேர்ந்த குமார சிங்கம் திலக்சன்(16) செங்கலடியை சேர்ந்த புவிச்சந்திரன் சுமன் (16வயது) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்களாவர்.
கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய போது தாங்களே இக்கொலையை செய்ததாகவும், இக்கொலையை தனது காதலி தக்ஸிகாவே செய்யுமாறு தூண்டியதாகவும் கொலையை நடத்திய பிரதான நபரான அஜந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரகு தக்ஸிகா காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் அதிர்ச்சி தரும் பல தகவல்களை கூறியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.
நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன்,
இதனை அறிந்த எனது பெற்றோர் காதலுக்கு தடை போட்டனர். எனது காதலுக்கும் அச்சுறுத்தல் விடுத்தனர். இதனால் பெற்றோர் உயிருடன் இருந்தால் காதலுக்கு தடையாக இருப்பார்கள் என கருதியதால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அவர்களுக்கு நஞ்சை போட்டு கொல்ல வேண்டும், அல்லது அவர்களை வெட்டி கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதனை தான் செய்வதாக எனது காதலன் கூறினார்.
கொலை நடப்பதற்கு முதல் நாள் 7ஆம் திகதி அம்மா அப்பா, சகோதரி, ஆகியோருடன் நான் மட்டக்களப்பு நகருக்கு புதுவருடத்திற்கு உடுப்பு எடுப்பதற்கு சென்றோம். அப்போது எனது காதலனுக்கு கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டு கதவு திறப்பு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னதுடன் சமயலறையில் இருக்கும் சாப்பாட்டிற்குள் நஞ்சை கலந்து விடுமாறு கூறினேன்.
அதன் படி எனது காதலன் வீட்டிற்கு வந்து உணவில் நஞ்சை கலந்து வீட்டு சென்றார். மாலை 7மணியளவில் வீட்டிற்கு வந்தோம். எனக்கு பசிக்கவில்லை என உணவை உண்ணவில்லை. அப்போது சகோதரி உணவில் ஏதோ மணப்பதாக கூறினார். எனது தந்தையும் கறியை பார்த்து விட்டு ஏதோ மணக்கிறது என கூறி அதனை உண்ணாது கொட்டி விட்டார்கள்.
இதனால் எமது திட்டம் தோல்வியடைந்தது. எப்படியாவது அன்றிரவு எனது பெற்றோர் இருவரையும் கொல்ல வேண்டும் என திட்டமிட்டேன்.  காதலனுக்கு தொலைபேசி எடுத்து நஞ்சு கலந்த உணவை அவர்கள் உண்ணவில்லை, அவர்கள் நன்றாக நித்திரை கொண்டபின் தகவல் தருகிறேன். நீங்கள் வந்து அவர்களை கொலை செய்யுங்கள் என கூறினேன், அதன் படி எனது தாயும் தந்தையும் நன்றாக நித்திரை கொண்ட பின் காதலனுக்கு தகவல் அனுப்பினேன். எனது காதலன் இரு நண்பர்களுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வளவு கேற்றை திறந்து உள்ளே விட்டேன், எங்கள் நாய் குலைத்தது. நாயை ஒருவாறு கட்டுப்படுத்தி விட்டு வீட்டு கதவை திறந்து விட்டேன்.
அவர்கள் மூவரும் எனது பெற்றோர் படுத்திருந்த அறைக்குள் சென்று இருவரையும் வெட்டி கொலை செய்தனர். அதனை நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் காதலனையும் நண்பர்களையும் பத்திரமாக அனுப்பி வைத்தேன்.  அவலக்குரல் கேட்டு அங்கு எனது அம்மாவின் தகப்பனார் வந்தார். எனக்கு எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன்
இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா என்ற 16வயது மாணவி தெரிவித்துள்ளா

ad

ad