19 ஏப்., 2013


கர்நாடகம்: 71 டி.எஸ்.பி.க்கள் உள்பட 362 போலீசார் அதிரடி மாற்றம்
 
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள 71 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் 291 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அதிரடியாக இன்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 362 போலீசார் தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.