19 ஏப்., 2013மதுவிலக்கு நடைப்பயணத்தில் வைகோ!

“முழு மதுவிலக்கே நமது” எனும் குறிக்கோளை வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை  மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.


இன்று காலை கரட்டூரில் நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ, ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், மாணவர்களையும் சந்தித்து மதுவின் கொடுமையை விளக்கினார்.
இன்றைய நடைப்பயணத்தை உடுமலைப்பேட்டையில் நிறைவு செய்யும் வைகோ அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதில் வைகோ-வுடன்  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி,   துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாவட்டச் செயலாளர்கள் ஆர்.டி.மாரியப்பன், குகன்மில் செந்தில் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.