புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2013


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மைக் ஹசி- முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 18 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
 
2-வது விக்கெட்டுக்கு ரெய்னா களம் இறங்கினார். ஹசியும், ரெய்னாவும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 90 ரன் இருக்கும்போது ரெய்னா 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து டோனி, ஹசியுடன் ஜோடி சேர்ந்தார். ஹசி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
 
அணியின் ஸ்கோர் 19.3 ஓவரில் 164 ரன் இருக்கும்போது டோனி 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பிராவோ 3 ரன் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. ஹசி 65 ரன் எடுத்தது கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
 
170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் வார்னர்- சேவாக் களம் இறங்கினார்கள். வார்னர் 1 ரன்னில் மோகித் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு சேவாக் உடன் ஜுனேஜா ஜோடி சேர்ந்தார். இவர் 2 ரன்னில் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஜெயவர்த்தனே 6 ரன்னில் அல்பி மோர்கல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த சேவாக் 17 ரன்னில் சர்மா பந்தில் அவுட் ஆனார்.
 
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க டெல்லி அணி 17.3 ஓவரில் 83 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜாதவ் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 31 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 86 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

ad

ad