புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

rain_keleசுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலப் பகுதிக்குள் இப்புகையிரத நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி நகரிற்கிடையிலான புகையிரதப் பாதுகாப்புப் கடவைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது…..ஏற்கனவே பல கால்நடைகள் இப் பரீட்சார்த்த புகையிரதப் பயணத்தின் போது கொல்லப்பட்ட நிலையில் முதலாவது மனிதப் பலியெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிளிநொச்சி தொண்டைமான் நகர் பகுதியினைச் சேர்ந்த 70 வயது முதியவரான முத்தப்பா எனத் தெரிய வருகிறது.
rain_kele1rain_kele2rain_kele3rain_kele4rain_kele5

ad

ad