புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல் 
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதலில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேர் டெமோ வாகனம் ஒன்றில் சென்று நேற்று பிற்பகல் வேளை தனங்களப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நாவற்குழியை நோக்கி வந்துகொண்டிருந்தபோது தச்சன்தோப்பு சந்தியிலுள்ள இராணுவத்தினர் தங்களை மறித்து எங்கே போகின்றீhகள் என்று விசாரித்தாகவும் தாங்கள் நாவற்குழி சந்திக்கு செல்கின்றோம் என்று கூறியபோது நாவற்குழி சந்திக்கு செல்வீர்களா என்று பல தடவைகள் கேட்டதாகவும் மேற்படி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் இவ்வாறு திருப்பத் திருப்பக் கேட்டமையானது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தாங்கள் அச்சமடைந்து நாவற்குழி சந்திக்கு மாற்றுப் பாதையூடாக செல்ல முற்பட்டதாகவும் இதன்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த வெள்ளை நிற வாகனமொன்று தங்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்கள் தெரிவித்தனர். குறித்த வாகனத்தைக் கண்டதும் நாங்கள் அச்சமடைந்து எமது வாகனத்தை மீண்டும் வந்த பாதையாகிய கேரதீவு வீதிக்கு திருப்பினோம். அந்த வாகனம் எங்கள் வாகனத்தை பின்தொடர்ந்தது. நாங்கள் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு அண்மையில் எமது வாகனத்தை நிறுத்தினோம். அந்த வாகனம் எங்களைக் கடந்து சென்றது. அதனால் நாங்கள் மீண்டும் நாவற்குழியை நோக்கிப் பயணித்த போது சடுதியான வேகத்தில் எங்களைத் துரத்தி வந்த அந்த வாகனம் எங்கள் வானத்திற்கு குறுக்கே நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த எட்டு வரையான இளைஞர்கள் சிங்களத்தில் கத்தியவாறு எமது வாகனத்தை நோக்கி ஒடி வந்து இரும்புக் கம்பிகளால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் நாங்கள் ஓடினோம். ஆனாலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் ஒருவாறு எமது சாரதி புத்திசாதுரியமாக செயற்பட்டு வாகத்தை திருப்பிக்கொண்டு ஓடியதால் நாங்கள் தப்பித்தோம் என்று காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர். தங்களைத் தாக்கிய அனைவரும் கட்டைக் காற்சட்டையும் ரீ-சேர்ட்  அணிந்திருந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் (24) மற்றும் ராஜ்குமார் ராஜிந்தன் (19)ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad