புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது பிரபாகரன் தான்: கே.பி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன், அவுஸ்திரேலிய செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நடைபெற்ற தாக்குதலில் விடுதலைப் புலிகள் தோல்வியை தழுவியது என்பது அறிந்த விடயமே ஆகும்.
மேலும் இந்தியாவிலிருந்து அமைதிப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பின்னரே விடுதலைப் புலிகளும், இந்திய இராணுவமும் எதிரிகளாயினர்.
அதன் பின்னரே பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் செயலை செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரமுன்னர் தமிழ்நாட்டு அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
பெண் தற்கொலைக் குண்டுதாரி மூலம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டமை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலைப் புலிகள் ஒரு இரக்கமில்லாத எதிரியாக இந்தியா பார்க்கத் தொடங்கிவிட்டது என்றார்.

ad

ad