புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த லொறியிலிருந்து 120 கிலோ வெடிபொருட்கள் மீட்பு
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து 120 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டு பயங்கரவாத சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  லொறியொன்றிலிருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
லொறியில் மிக சூட்சுமமான முறையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கிராம் எடையுடைய ரீ.என்.ரீ. வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடைந்து போன லொறியை பெக்கோ ஒன்றில் அகற்றும் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு மீது தாக்குதல் நடத்த இந்த வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
17 வருடங்களுக்கு முன் கைப்பற்றிய லொறியில் இருந்து ரி.என்.ரி வெடிப்பொருள் மீட்பு
1996ம் ஆண்டு வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கைப்பற்றப்பட்ட லொறி ஒன்றில் இருந்து இன்று காலை ரி.என்.ரி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து 1996ல் இந்த லொறி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
ஆனால் லொறியில் இருந்து வெடிப்பொருட்கள் எதுவும் அப்போது மீட்கப்பட்டவில்லை. எனினும் மேலதிக விசாரணைகளுக்காக லொறியை பொலிஸார் தடுத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த லொறி நகர்த்தப்பட்ட போது லொறிக்குள் வெளியில் தெரியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி.என்.ரி வெடிப்பொருட்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
10 பொதிகளில் ரி.என்.ரி வெடிப் பொருட்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றை செயலிழக்க செய்ய அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad