புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பரப்புரை செய்து வருகின்ற போதிலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எந்த முறைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா தேரதல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாகவோ, கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறிப்பிடத்தக்க எந்த முறைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, ராவண பலய அமைப்பு மட்டும் தான், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நாட்டின் அரசியலமைப்புக்கு முருணானது என்று முறைப்பாடு செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டங்களை மீறாத வகையில் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad