புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

இலங்கையின் அநேகமான தெற்கு ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது. அநேகமான சிங்கள நாளிதழ்களில் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை சித்தரிக்கக் கூடிய வகையில் செய்திகள் பிரசுரமாகின்றன.
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர
ன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் வெற்றியின் பின்னர் உரிய அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்த நேரிடும்.

வடக்கில் தேவையற்றளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவான படையினரைக் கொண்டு வடக்கு மக்களை ஆட்சி செய்ய இடமளிக்க முடியாது.

போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் படையினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை வழங்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

அவ்வாறு மறுத்தால் அதனை சர்வதேச சமூகத்திடம் அறிவிப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க மீண்டும் முயற்சி -விமல் வீரவன்ச

நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தால் அதற்கான மருந்து மாத்திரைகள் உண்டு - அரசாங்கம் - தினமின

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக நிராகரிக்கின்றோம் – கருணா

இறந்த பிரபாகரனுக்காக விக்னேஸ்வரன் பிரபாகரன் ஆகியுள்ளார் – அஸ்வர்

வடக்கில் பிரிவினைவாதத்தை தூண்ட கூட்டமைப்பிற்கு இடமில்லை – பாதுகாப்பு அதிகாரி

என இன்றைய சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத்த்தை தூண்டுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ad

ad