புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013


நரேந்திர மோடியைவிட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.

அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகலாந்து, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட், இல்லை என்றால் மற்ற சில கட்சிகள் தான் வரமுடியுமே தவிர பா.ஜ.கவால் அந்த பகுதிகளில் வெற்றி பெறலாம் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத கற்பனை கதை, அப்புறம் எப்படி மோடி பிரதமராக முடியும்.

பல லட்சம் கோடி கடன் உள்ள மாநிலமாக இன்று குஜராத் உள்ளது. ஆனால், குஜராத் மாநிலம் வளர்ச்சிப் பெற்று விட்டதாக மோடி கூறுகிறார். அதேபோல், ஊடகங்களும் அவரை பிரதமர் போல் வர்ணித்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு மொழி தெரிந்த ஒருவர் பிரதமாராகலாம் என்றால், தமிழக முதல்வர் ஜெயலலிதா 9 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். நாட்டை திறம்பட செயல் படுத்தும் வல்லமை படைத்தவர். அவரே, பிரதமராவதற்கு முழு தகுதியையும் படைத்தவர்" என்று பேசினார்.

ad

ad