புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013



            ந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வினை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்து கிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (ஃப்லிம் சேம்பர்). ஜனாதிபதி உட்பட தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய  4 மாநில முதல்வர்களும் கலந்து கொள்வதால் விழாவின் பிரமாண்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்விழா குறித்த சர்ச்சைகளும் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.


இந்திய சினிமா துவங்கி கடந்த மே 13-ந் தேதியோடு 100 வருடம் ஆகிறது. இந்திய சினிமாவில் பெரும்பங்கு வகித்தவை தென்னிந்திய மொழி சினிமாக்கள்தான். அதனால் தென்னிந்திய திரைப் படங்களைத் தவிர்த்து இந்திய சினிமா இல்லை. அந்த வகையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டை பிரமாண்ட விழாவாக கொண்டாட முடிவு செய்தது ஃபிலிம் சேம்பர்.

""நான்கு மாநில மொழிகளை உள்ளடக்கிய விழா என்பதால் விழாவினை  4 நாட்கள் நடத்தவும் அதில் ஜனாதிபதி மற்றும் 4 மாநில முதல்வர்களை பங்கேற்க வைப் பது எனவும் திட்டமிடப்பட்டு, விழாவை ஜூலையில் நடத்த தீர்மானித்தனர். ஆனால், ஜனாதிபதி மற்றும் முதல்வர்களின் கால்ஷீட் கிடைக்காததால் செப்டம்பருக்குத் தள்ளிவைக்கப் பட்டது. அதன்படி இம்மாதம் 21 தொடங்கி 4 நாட்கள் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடக்கவிருக்கிறது இந்த பிரமாண்ட விழா'' என்கி றார்கள் விழா கமிட்டி உறுப்பினர்கள்.

விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதன் ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என தமிழ்த் திரைப்பட சங்கங்களிடம் நாம் பேசியபோது சில அக்கப்போர்களை கொட்டினார்கள். ""விழாவினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். முதல் 3 நாட்கள் 4 மொழி திரைப்படங்களின் பிரபலமான நடிகர்-நடிகைகள், கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள்  நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் தென்னிந்திய சினிமா வளர்ச்சிக்கு வித்திட்ட கலைஞர்கள், சாதனையாளர்கள் பலருக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. இந்த பட்டியலில் கலைஞரின் பெயரில்லை. இந்த பட்டியல் தயாரித்தபோது, ஒவ்வொரு மொழியிலுமுள்ள சாதனையாளர்கள், மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்-நடிகை களின் பெயர்களை எழுதிக்கொண்டே வந்த விழா கமிட்டி உறுப்பினர்களுக்கு, தமிழகம் என வந்தபோது முதலில் நினைவுக்கு வந்தது கலைஞரின் பெயர்தான். ஆனால், அவரது பெயரை ஆளும் கட்சி விரும்பாது என்பதால் கலைஞரின் பெயரை தவிர்த்தனர். அதேபோல, தி.மு.க. ஆதரவு கலைஞர் களின் பெயர்கள் எதுவும் தப்பித்தவறி இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது விழா கமிட்டி. 

இது ஒரு புறமிருக்க கலைஞர், விஜயகாந்த், குஷ்பு, வடிவேலு மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த நடிகர்-நடிகைகளுக்கு அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் நேரில் அழைப்பிதழைக் கொடுத்தவர்கள், விஜய்யை விழாவுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என குழம்பிப் போய் கடைசியில் அழைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் விஜய்யின் அப்பாவுக்கு அழைப்பில்லை. ஆளும் தரப்பினரோடு மனக்கசப்பில் இருக்கும் விஜய், விழாவில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என ஊசலாட்டத்தில் இருக்கிறார். சட்டமன்றத்தைப் புறக்கணிப்பது போல இந்தவிழாவையும் புறக்கணிக்கிறார் விஜய்காந்த்''’ என்று விவரிக்கின்றனர்.

மேலும் நம்மிடம் பேசிய ஃபிலிம் சேம்பரோடு தொடர்புடையவர்கள்,’""நான்கு மொழிகளிலிருந்தும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட பிரபலமானவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். விழா ஏற்பாட்டுக்கான காண்ட் ராக்ட்டை பெற்றுவிட சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் முயற்சித்தது. இந்த காண்ட்ராக்டில் இரண்டு விஷயம் உண்டு. ஒன்று... நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிப்பது. மற்றொன்று...…நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது. இந்த காண்ட்ராக்டை எடுக்கும் நிறுவனம் பல கோடிகளை சம்பாதிக்க முடியும். அதன்அடிப்படையில் ராடன் டி.வி. முயற்சிக்க, அதற்கு பாசிட்டிவ்வான க்ரீன் சிக்னலே ஃப்லிம் சேம்பர் தரப்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், ஆளும் தரப்பிலிருந்து கொடுக்கப் பட்ட அழுத்தம் அந்த காண்ட்ராக்ட் ராடன் டி.வி.யை விட்டு நழுவிப்போனது''’என்கிறார்கள். 

இது குறித்து, ஃபிலிம் சேம்பர் நிர்வாகத்திடம் நாம் பேசியபோது நேரடியாக பேசுவதற்கு மறுத்துவிட்டனர். ஆஃப் த ரெக்கார்டாக பேசிய ஃபிலிம் சேம்பர் தரப்பு,’""விழா நிகழ்ச்சிக்கான காண்ட்ராக்டை பெற ராடன் டி.வி. முயற்சித்தது உண்மைதான். ஆனால், சில பல காரணங்களால் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தற்போது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை பெங்களூரில் உள்ள ஈவன் மேனேஜ் மெண்ட் நிறுவனமான விஸ்க்ராப்டிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒளிபரப்பை பொறுத்தவரை தமிழக உரிமையை ஜெயா டி.வி.க்கும் மற்ற 3 மாநில உரிமையை பி.வி.பி. நிறுவனத்திற்கும் தரப்பட்டுள்ளது. எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பராகவும் பிரமாண்டமாகவும் நடக்கும். மற்றபடி இதில் சர்ச்சைகளுக்கு இடமில்லை''’ என்கின்றனர்.

ராடன் டி.வி. தரப்பில் விசாரித்த போதும், பதில் சொல்வதை தவிர்த்தனர். இந்த சூழலில், தமிழக சேனல் வட்டாரங்களில் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது,’""விழா காண்ட்ராக்ட் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தபோது, 20 கோடிக்கு காண்ட்ராக்டை எடுத்துக் கொள்ளுங் கள் என்றும் ஆனால் தமிழகத்தில் ஒளிபரப்பும் உரிமையை மட் டும் ஆளும் தரப்பு டி.வி.க்கு கொடுத்துவிட வேண்டுமென் றும், மற்ற 3 மொழி உரிமை யில் எந்த நிபந் தனையும் இல்லை என்றும் பேசப்பட்டது. இதற்கு ராடன் டி.வி ஒப்புக்கொண் டது. அதேசமயம் விழா காண்ட் ராக்ட்டை ராடன் டி.வி.எடுத்துள்ளது என்றும் இதன் பின்னணியில் சன் டி.வி. நிர்வாகம் இருப்பதாகவும் மேலிடத்திற்கு தகவல் போக, உடனே அங்கிருந்து வந்த உத்தரவையடுத்து ராடன் டி.வி.யுடன் போடப்படவிருந்த ஒப்பந்தத்தை கை கழுவியது ஃபிலிம் சேம்பர்''’என்று சுட்டிக்காட்டினர்.

இவ்வளவு அக்கப்போர்கள் ஒருபுறமிருக்க... காங்கிரசுக்கும் ஜெய லலிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில் மூன்று மாநில காங்கிரஸ் முதல்வர்களோடு ஜெயலலிதாவும் மேடையேறுகிறார் என்பதே இவ்விழாவின் அரசியல் பரபரப்பு.

ad

ad