ஈழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர், ""இலங்கை என்பது தமிழர் களின் பூமி.தமிழீழ கனவு அனைவரின் விருப்பம்'' என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த்தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம்,நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லி யும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
காங்கிரஸும் மத்திய அரசும் தமிழீழத்திற்கு எதிரானதாக இருக்கும் நிலையில், தமிழீழம் அனைவரின் விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பதன் பின்னணி என்ன?
இலங்கையை பிரிப்பது இந்தியாவுக்கு உடன்பாடானதல்ல. நாச்சியப்பனின் கருத்து ஏற் புடையதல்ல என்கிறாரே அமைச்சர் நாராயணசாமி?
நாராயணசாமியின் கருத்து சரியானது தான்.அது தான் என்னுடைய கருத்தும். ஏனெனில் இலங்கையை பிளவு படுத்த வேண்டும் என்று நான் எங்கும் எப்போதும் சொல்லவில்லை. அரசியல் அதிகாரங்கள் மூலம் இலங்கையையே தமிழர்கள் ஆள வேண்டும் என்பதுதான் என் கருத்து. இதற்கு, இலங்கையை பிளவு படுத்தியோ அதன் மீது யுத்தம் நடத்தியோ இதனை கைப்பற்ற வேண்டும் என்பது பொருள் அல்ல. அப்படி சில பத்திரிகையாளர்கள் குழம்பிப்போய் அர்த்தப் படுத்திக்கொண்டதால் சர்ச்சைகள் உருவாகி விட்டது. நாராயணசாமியின் பேட்டியை பார்த்ததும் அவரை தொடர்புகொண்டு நான் பேசினேன். என் கருத்து அப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் அவரிடம் விவரித்தேன்.
இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் போடப்பட்டதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்படி வழங்கவிருக்கிறது இந்தியா. நாம் கொடுக்காவிட்டால் நமது எதிரி நாடான சீனா கொடுக்க தயாராக இருக்கிறது.நாம், போர்க் கப்பல்களை கொடுப்பதால் அது தமிழர்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்தப்படும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றெல்லாம் சொல்வது பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது. இலங்கையுடன் நாம் மோதல் போக்கை கையாண்டால் அங்குள்ள தமிழர்களுக்காக இந்தியா மேற்கொண்டு வரும் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பாதிக்கும்.இதைத்தான் தமிழக அரசியல் கட்சிகள் விரும்புகிறதா?
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின்படி உருவான 13-வது சட்டத்திருத்தத்தையே அமல்படுத்தாமல் தமிழின விரோத போக்கை கையாளும் இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா சொல்லி வருவது ஆரோக்கியமானதாக இல்லையே?
தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவேண்டும், வடக்கு-கிழக்கு பகுதிகளை தமிழர்களின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும், 37 அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.
இந்த 37 அதிகாரங்களை தமிழர் பகுதிக்கு மட்டுமல்லாது வேறு 9 மாநி லங்களுக்கும் வழங்க வேண்டும் என சொல்கிறது ஷரத்து. இதனை இலங்கை அரசும் அந்த நாட்டின் உச்சநீதிமன்றமும் ஏற்க மறுத்துள்ளதால் ஒப்பந்தம் நிறைவேறு வதில் சிக்கல்.இருப்பினும், இதனை அமல்படுத்த வேண்டி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது இந்தியா.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், இது பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார் பிரதமர். தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காத போக்கு காங்கிரஸிடம் அதிகரித்திருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுகிறதே?
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்பது இலங்கைத் தமிழர்களின் விருப்பம். பிரதமர் கலந்து கொண்டால்தான் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனை தமிழகத் தலைவர்களோ புரிந்துகொள்வதே இல்லை. இருப்பினும் காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் இன்னும் முடி வெடுக்க வில்லை.