புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கெளரவமான எண்ணிக்கையுடைய சீட்டுகளை பெற்று, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதுதான் சோவின் மெகா திட்டம். இந்த திட்டத்திற்கு முதலில் ரஜினி தயங்கினாலும் பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டுவிட்டார் என்றுதான் தெரிகிறது. ரஜினிக்கு மோடி நெருங்கிய நண்பர் என்பதால் அவர் உடனடியாக இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவேதான் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் சோ.
ஆனால் ஜெயலலிதா உடனடியாக பதில் கூறவில்லையாம். ஆலோசித்து பதில் சொல்வதாக கூறியுள்ளார். பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொள்வாரா என தெரியவில்லை. ஆனால் மோடி கட்டாயப்படுத்தினால் ஜெயலலிதா மறுக்க மாட்டார் என்றே சோ நம்பிக்கையுடன் உள்ளாராம்.
இந்த திட்டத்தின்படி வரும் லோக்சபா தேர்தலில் ரஜினியை ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கவைத்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு முக்கிய பதவியும் கொடுக்க மோடி உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.

ad

ad