புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014


அஜீத் - விஜய்! பொங்கலுக்கு தூள் பறக்கும் ஃபைட்! 

               எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன் பின்பு தான் இந்த ஒரே நாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது. இந்த வருட பொங்கலுக்கு கைவிட்ட பழக்கத்தை கையிலெடுத்திருப்பது ஜில்லா டீம் தான். படம் துவங்கியபோதே ஜனவரி 10 ரிலீஸ் என அறிவித்து விட்ட வீரம் டீமுடன், பொங்கல் ரிலீஸ் என்று படப்பிடிப்பை துவங்கிய ஜில்லா டீம் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது.



ஜனவரி 10-ஆம் தேதிக்காக கிளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருப்பதுபோல் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டு திரைப்படத்தில் வரும் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சியும் அதிரடித்திருவிழாவாம். அண்ணன் - தம்பிகள் என ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘விநாயகம் பிரதர்ஸ்’ கதை தான் வீரம் என்றாலும் க்ளைமேக்ஸில் 20 நிமிட சண்டை காட்சிகள் உணர்ச்சிகரமான சீன்கள் தானாம். 

அப்பா - மகனின் (சிவன் - சக்தி) ஆக்‌ஷன் கலந்த கதை தான் ஜில்லா. நூறு ஏக்கர் சோளக்காட்டில் ஏரியல் வியூவில் எடுக்கப்பட்ட க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி தான் ஜில்லாவின் ஸ்பெஷல். அவுங்கவுங்க ஆளுக அவுங்கவங்க பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்க.

ad

ad