புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு

அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை. தெரி­வு க்­குழு விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முடிவு சரி­யா­ன­தாகும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி) தெரி­வித்­துள்­ளது. போராட்­டத்தின் மூலமே சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். இதனை சிறு­பான்­மை­யினர் உணர்ந்து செயற்­பட வேண்டும் எனவும் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.
 
இது தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­விக்­கையில்,
 
அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைப்­ப­தற்கு முன்னர் வடக்கு மக்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும். வடக்கில் குவிக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை வைத்துக்கொண்டு தமி­ழர்­களின் சுதந்­தி­ரத்­தையும் அவர்­களின் நிலங்­க­ளையும் பறித்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்­ப­தா­னது வேடிக்­கை­யான விட­ய­மா­கவே உள்­ளது.
 
கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தெரி­வுக்­குழு விட­யத்தில் மிகச் சரி­யான முடி­வி­னையே எடுத்­துள்ளார். அவர்­களின் கோரிக்­கை­களை பெற்­றுக்­கொள்­ளாது அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தனால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப்­போ­வ­தில்லை.
 
இன்­றைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் மட்­டுமே சுக­போக வாழ்க்­கை­யினை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
 
விலை­யேற்றம், வரி அதி­க­ரிப்­பினை அர­சாங்கம் மேற்­கொண்டு மக்­களின் பணத்தை சூறை­யாடி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்­தினர் உண்டு வரு­கின்­றனர். கொழும்பு மற்றும் ஏனைய நகர்­ப் புற மக்­களே வாழ முடி­யாத நிலையில் உள்­ளனர். இந்­நி­லையில் வட மாகாண கிழக்கு மக்­களின் நிலை­பற்றி சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.
 
இன்று வடக்கில் நிலங்­க­ளையும் மக்­களின் சொத்­துக்­க­ளையும் அப­க­ரித்து அம் மக்­களை நடுவீதிக்கு இறக்­கி­யுள்­ளனர். இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இத்­தனை வரு­டங்­க­ளாக வாழ்ந்த மக்­க­ளுக்கு இன்று வரை விடிவு காலம் ஏற்­ப­ட­வில்லை. இனியும் தமது உரி­மைகள் இந்த அர­சாங்­கத்­தினால் கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் இல்லை.
 
எனவே சிறு­பான்மை மக்கள் மட்­டு­மன்றி இலங்­கையில் வாழும் அனைத்து மக்­களும் தத்­த­மது நிலை­மை­களை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
மக்­களின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாயின் அனை­வரும் ஒன்­றி­ணைந்து போராட வேண்டும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யினை அரா­ஜக அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நாம் எப்­போதும் மக்கள் சக்­தி­யினை ஒன்றுதிரட்டத் தயா­ரா­க­வுள்ளோம் என்றார்.

ad

ad