புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

இலங்கையை குற்றவாளியாக்கவே மேற்குலக நாடுகள் முயற்சி: தயான் ஜயதிலக்க
அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை நிறைவேற்ற இந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பின் இலங்கை விஜயம் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
புனித அந்தோணியார் மைதானத்திற்கு விஜயம் செய்தாகவும் அந்த இடம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஷெல் வீச்சு தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இடம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அமெரிக்க தூதரகம் இதனை முழு உலகத்திற்கும் கூறிவிட்டது. இதன் மூலம் சர்வதேச விசாரணை நடத்த போகும் முயற்சியை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
சர்வதேச விசாரணை நடத்தி இலங்கை இராணுவமும் இலங்கை அரசும் மேற்கொண்ட நியாயமான போரை தலைக்கீழாக புரட்டி போட்டு, இலங்கை மீது விமர்சனங்களை முன்வைத்து குற்றவாளியாக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் பயங்கரமான ஆபத்து.
இதனை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
இந்த விசாரணை நடத்த நீதிபதி சீ.கிறிஸ்டி வீரமன் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் யோசனை முன்வைக்கின்றேன். அல்லது டெஸ்மன் டி சில்வா என்ற மகாராணி சட்டத்தரணியை நியமித்து தேசிய ரீதியான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் வடக்கு மாகாண சபையுடன் அரசியல் ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தி அந்த உண்மையை உலகிற்கு காட்ட வேண்டும். முடிந்தளவான அரசியல் இணக்கப்பாடுகளை பகிரங்கமாக ஆரம்பிக்க வேண்டும்.
மூன்றாவது நடவடிக்கையாக அரசாங்கத்தில் இருக்கும் வெளிநாட்டு கொள்கைகளை நன்கு அறிந்த அதில் நிபுணத்தும் பெற்ற சிலரை கொண்ட அமைச்சரவை குழு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கலாநிதி சரத் அமுனுகம, டியூ.குணசேகர, ரஜீவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க, மிலிந்த மொரகொட ஆகியோர் அந்த குழுவிற்கு நியமிக்கப்பட வேண்டும்.
நடந்து வரும் இந்த பனிப் போரை வெற்றி தோல்வியின்றி நிறுத்த இந்த அமைச்சரவை குழு ஜனாதிபதி உடனடியாக நியமிக்க வேண்டும். அத்துடன் இலங்கையின் நட்பு நாடுகளான ரஷ்யா, சீனாவுடன் ராஜதந்திர மட்டத்திலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
ரஷ்யாவும் சீனாவும் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகள். எனக்கு தெரியவந்த வகையில் இலங்கை அரசாங்கம் இந்த நாடுகளிடம் உதவிகளை இதுவரை கோரவில்லை. இந்த நாடுகளை பயன்படுத்தி வாக்குகளை கேரிக்க வேண்டும்.
வெளிவிவகார அமைச்சு ஜெனிவாவில் வெற்றிப் பெற்றதையும் 2012 ஆம் ஆண்டு 2013 ஆம் தோல்வியடைந்தையும் இதுவரை கற்றிந்து கொள்ளவில்லை. எதற்காக வெற்றிப் பெற்றோம், ஏன் தோல்வியடைந்தோம் என்பதை அரசாங்கம் ஆராயவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad