புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

ஜெனிவா செல்லும் குழுவை ஜனாதிபதியே தீர்மானிப்பார்!- லலித் வீரதுங்
இலங்கை சார்பில் ஜெனிவா செல்லும் தூதுக் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அவரது செயலாளர் லலித் வீரதுங்க நேற்றுத் தெரிவித்துள்ளார்நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் தானே என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் வினவியதற்கு, இந்த ஆண்டு குறித்த தீர்மானத்தை இலங்கை வித்தியாசமான முறையில் கையாளும் என்று அவர் கூறினார்.
ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூன் நியமித்த விசேட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
எனவே குறித்த அறிக்கையைச் சட்ட ரீதியாக இலங்கை எதிர்கொள்ளப் போகின்றதா என்று அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,அவ்வாறு செய்யப்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஜெனிவாவுக்குச் செல்லும் இலங்கைக் குழுவில் நீங்கள் இடம்பெறுவீர்களா என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த அவர், நான் ஏற்கனவே சர்வதேச நாடுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஜெனிவா அமர்வுக்குச் செல்லும் தூதுக் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார். அவர் இன்னமும் குழுவைத் தீர்மானிக்கவில்லை என்று கூறினார்.

ad

ad