புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

விருப்பு வாக்குகளுக்காக மோதலில் ஈடுபடவேண்டாம்

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தல்
சுதந்திரக் கட்சி வேட்பாளர்க ளுக்கும் அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறி முறைகேடாக நடந்து கொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யும் நடவடிக்கை பூர்த்தியடைந்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையிலேயே அவர் கட்சி வேட்பாளர் களுக்கு இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
ஐ.ம.சு.மு.வில் போட்டியிடும் சக கட்சி வேட்பாளர்களுடன் மோதிக் கொள்ளாது ஒத்துழைப்புடன்
செயற்படுமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய இவ்வாறு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் மார்ச் மாதம் 29ம் திகதி நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதோடு இம்மாத இறுதியில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad