புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

அனைத்துலக போர்க்குற்ற விசாரணை – பொறுப்பில் இருந்து நழுவுகிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 

அண்மையில் அவுஸ்ரேலியாவைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், போரின் போது இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐ.நா பொதுச்செயலரின், நிலைப்பாட்டில் தான் ஐ.நா தொடர்ந்தும் உள்ளது.

நம்பகமான உள்நாட்டு தேசிய செயல்முறையா, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையா என்பதை தீர்மானிக்க வேண்டியது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் தான்.

நாம் அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம்.

எதற்காக பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம் என்பதை தெளிவுபடுத்தி விட்டோம்.

தீர்ப்புக் கூறுவதை நாம் உறுப்பு நாடுகளிடமே விட்டு விட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad