புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல

வேறு எவரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் சட்டங்களை இயற்ற முடியாது
மனித உரிமைகள் விடயத்தில் பல்வேறு சர்வதேச உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இலங்கை உடன்பட்டுள்ள அதேசமயம், இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரம் அந்த நாட்டுக்குரியதே தவிர வெளிநாட்டு அல்லது வெளிவாரி நீதிமன்றத்துக்குரியதல்ல என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை என்ற விடயத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.
எமது சட்ட அமைப்பின் பிரகாரம் சர்வதேச உடன்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்குரிய சட்டம் இயற் றப்பட்டு பாராளு மன் றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட அமைப்பினுள் உள்வாங்கப்பட வேண் டும். அதற்குரிய நடவடிக் கைகள் எடுக்கப்பட் டுள்ளன. சம்பந்தப்பட்ட சட்டங்கள் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், இதில் நாட்டின் அரசியலமைப்பின் வரை யறைக்குட்பட்டே செயற்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரமானது எமது நாட்டுக்கே உரியதாகும். இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரம் வெளிநாட்டு அல்லது வெளிவாரி நீதிமன்றங்களுக்கு கிடையாது.
அத்துடன் மேற்படி உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லையென எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
எமது அரசியலமைப்பு, சட்ட கூட்டமைப்பு மற்றும் சட்ட ரீதியான சம்பிரதாயங்கள் மூலம் இங்கு மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப் பட்டுள்ளன. ஆனால் எந்த நாட்டுக்கு எதிராகவும் மனித உரிமையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த இடமளிக்க முடியாது. மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல.
வளர்ச்சியடையாத வறிய நாடுகளுக்கு எதிராக மனித உரிமைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை நாம் எப்போதும் எதிர்க்கின்றோம். மனித உரிமைகள் விடயத்தில் சகல நாடுகளும் சமமாக பார்க்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால் அவை நிரூபணமாகிவிட்டதாக அர்த்தம் கிடையாது’ என்று கூறினார். இதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் எப்போது முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாச எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பீரிஸ் :-
தற்போது 85 சதவீதமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மக்கள் மனித உரிமைகள் தொடர்பில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கவில்லை. கடந்த 4 வருடங்களில் அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்கு இன்று வடக்கு மக்கள் மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் ஆயுத குழுக்கள் கிடையாது’ என்று தெரிவித்தார்.
இதேநேரம், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதனாலேயே இன்று சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும், ஆதலால் அந்த பரிந்துரைகள் 100 சதவீதம் எப்போதும் நிறைவேற்றப்படும் என்று சஜித் பிரேமதாஸ எம்.பி. மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் : இந்த காரணத்திற்காக இவர்கள் எமது நாட்டினுள் தலையிட வில்லை. அதற்கு முற்றிலும் வேறு காரணம் இருக்கிறது. சாட்சிகள் பாதுகாப்பு சட்ட மூலம் போன்ற முன்னெடுப்புகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேறு யாரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் இந்த நாட்டில் சட்டங்களை ஏற்படுத்த நாம் தயாரில்லை’ என்று வாய் மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

ad

ad