புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்

மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.
வத்தளையில் நான் களமிறங்காவிட்டால்  அங்கு அரசாங்கத்தின் தோல்வி நிச்சயமாகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.விஜயகுமார் தெரிவித்தார்.வேட்பாளர்களான முன்னாள் மேல் மாகாண சபை அமைச்சர் நிமல்லான்ஸா, நீர்கொழும்பு முன்னாள் பிரதி மேயர்  எம்.எஸ்.எம். சகாவுல்லா, வத்தளை - மாபொல நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர் விஜயகுமார் ஆகியோருககு ஆதரவு திரட்டும் வகையில்
நீர்கொழும்பு பொனி கார்ட்ன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வேட்பாளர் ஆர்.விஜயகுமார் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
வேட்பாளர் ஆர்.விஜயகுமார் அங்கு தொடர்ந்து கூறியதாவது,
நீர்கொழும்பு நகர் வாழ் தமிழ் மக்களால் மிகச்சிறப்பான ஒரு கூட்டம் இங்கு எற்பாடு செயய்ப்பட்டுள்ளது. அதற்காக ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 59 வருடகாலமாக வத்தளை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கமே இருந்தது. எனது வருகையின் பின்னரே முதல் தடைவையாக வெற்றிலைச் சின்னம் வத்தளை ஆசனத்தை கைப்பற்றியது. நான் தெரிவு செய்ப்படுவதற்கு முன்னர் வத்தளை- மாபொல  நகரசபையில் வெற்றிலைச் சின்னத்தில் எந்தவொரு தமிழ் மகனும் வெற்றி பெற்றிருக்கவில்லை.
வத்தளை பிரதேசத்தில் நான் செய்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பார்த்தால் யாரும் வியப்படைவார்கள். அங்கு எனது வெற்றியை உறுதி செய்து கொண்டே நீர்கொழும்புக்கு வந்திருக்கிறேன். 
வத்தளையில் எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். அதேபோன்று நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் எனக்குக் கிடைக்கும். இந்த மாகாண சபை தேர்தலுக்காக இதுவரை நான்கு கோடி ரூபா பணத்தை செலவு செய்துள்ளேன். வத்தளையில் ஒரு இந்து பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எதிர்காலத்தில் நீர்கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கும் எனது சேவைகளை வழங்கவுள்ளேன் என்றார்.
நிகழ்வில் நீர்கொழும்பு முன்னாள் பிரதி மேயரும் வேட்பாளருமான  எம்.எஸ்.எம். சகாவுல்லாவும் உரையாற்றினார்.

ad

ad