புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே ஜெனிவா நடவடிக்கையின் திட்டம்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் நேரடியான கண்காணிப்பின் கீழ் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ஜெனிவா நடவடிக்கையை கருத முடியும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றதாகவும் தமிழ் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் நாட்டில் ஜனநாயகம், மத சுதந்திரம் இல்லை என்றும் அடிப்படைவாத குழுக்கள் சர்வதேசத்தில் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன.
இறுதியாக அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கம் என்ற பெயரில் மேற்குலக நாடுகள் இலங்கையில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
மேற்குலக நாடுகளின் உண்மையான நோக்கம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதல்ல. அடிப்படைவாத குழுக்களை எழுச்சிப் பெற செய்வதே அவற்றின் நோக்கம்.
இதனால் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் அச்சமின்றி, வலுவாக அதனை எதிர்கொள்ள வேண்டும். இலங்கை தனது சர்வதேச நண்பர்களுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்தி சீனா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜெனிவா நடவடிக்கைக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.

எதிர்க்கட்சிகள் தற்போது தனித்தனியாக செயற்பட்டு வந்தாலும் தமிழீழத்திற்கு தேவையான வகையில் எதிர்க்கட்சிகள் உதவி வருகின்றன என்றார்.

ad

ad